கிறிஸ்துவில் மறைவான ஓர் ஜீவியம் 55-11-10 1. நான்... (சகோதரனே, அது சரிதானே...?...) இந்த ஸ்வீடிஷ் (swedish) பாடகர்களால் எத்தனை பேர் மகிழ்கிறீர்கள், உங்களுடைய கரங்களை நாங்கள் பார்க்கட்டும். என்னே, நாம் அனைவருமே மகிழ்கிறோம் என்பதை நான் அறிவேன். அது சரியே. அவர் பாடுவதை நான் கேட்க விரும்புகிறேன். நான் நினைக்கிறேன் அவர் - அவர் அற்புதமானவர்; அவர்கள் இருவருமே. எல்லாம் சரி. சகோதரன் எக்பெர்க் அவர்களே. [சகோதரன் சில கருத்துக்களை கூறி, "மென்மையாக அவர் உன்னை கவனிக்கிறார்," என்ற பாடலை பாடி, ஒரு சாட்சியை பகிர்ந்து கொள்கிறார்- ஆசி] ஆமென். அல்லேலூயா. ஆம். ஆமென். தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆமென். ஆம். ஆமென். ஆம். ஆம். ஆமென். நான் செய்கிறேன். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரனே, எயினர் எக்பெர்க், அது...?... அந்த காரியங்கள் சாதாரணமாக நடந்துவிடுவதில்லை. அதை செய்ய தேவன் தேவையாயிருக்கிறார், ஆம் தானே? தேவன் மட்டும் நம் சகோதரனோடு இல்லாதிருந்தால், இன்றிரவு சகோதரன் நம்மோடு இங்கே பாடியிருக்கமாட்டார். ஆனால் சகோதரன் கூறியபடி, அவை எல்லாம் தேவனுடைய திட்டத்திலிருக்கிறது. அவர் எப்படியோ அவை எல்லாவற்றையும் திட்டமிட்டு வைத்திருக்கிறார். பிள்ளைகள் அவர்களின் பெற்றோர்களை சார்ந்திருப்பது போல, நாமும் அவரின் மேல் நம்பிக்கை வைத்து, அவர் மேல் சார்ந்திருப்பதையே அவர் விரும்புகிறார். அவர் அதை எப்பொழுதுமே நடைபெற செய்கிறார். எனவே அவர் அதை செய்ததற்காக நான் மகிழ்கிறேன். இந்த சகோதரர்கள், சகோதரன் வேர்மோ மற்றும் சகோதரன் எக்பெர்க், அவர்கள் பாடுவது, என் ஜீவியத்தில் எனக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கிறது. 2. அவர்களுடைய அருமையான தேசத்தில், ஸ்வீடன் (sweden), அங்கிருந்துதான் அவர்கள் வந்திருக்கிறார்கள். ஒரு சில வருடங்களுக்கு முன்பு நான் அங்கே ஒரு தொடர் கூட்டத்தில் இருந்தேன். அந்த மகத்தான ஆராதனைகளில் கர்த்தர் எப்படியாய் எங்களை மிக அற்புதமாக ஆசீர்வதித்தார், பின்லாந்து (Finland) முழுவதும், நாங்கள் இருந்த இடத்தில் - அந்த சிறிய பையன் மரித்தோரி லிருந்து உயிரோடெழுப்பப்பட்டான், அந்த செய்தி அங்கிருந்த தேசங்கள் முழுவதும் சென்றது. மேலும் எங்களுக்கு அது ஒரு அற்புதமான நேரமாயிருந்தது. எப்பொழுதாவது மறுபடியும் அங்கே சென்று, கடலுக்கு அப்பால் இருக்கிற எங்களுடைய ஸ்வீடிஷ் நண்பர்களை சந்திப்பேன் என்று நம்புகிறேன். ஏதோ ஒரு நாளில் ஒரு - அந்த மகத்தான பலவர்ண பட்சியின் செட்டைகளின் மேல் நாம் எழும்பி என்றும் திரும்பி வராத தேசத்தில் இறங்கப் போகிறோம். அது உண்மைதானே? அந்த நேரத்தைதான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். 3. இப்பொழுது, நாட்கள் தொடர்ந்து செல்ல செல்ல, நம்முடைய நம்முடைய சுகமளிக்கும் ஆராதனைகளை ஆரம்பிக்கும் விதத்தில், ஜனக்கூட்டம் பெருகும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். நாங்கள் இப்பொழுதுதான் வந்தோம், இந்த ஆராதனைக்காக ஒரே இரவில் இங்கே வந்தோம், அவர்கள் எங்களுக்கான கூடாரத்தை அமைத்தார்கள். சகோதரன் ஆர்கன்பிரைட் (Arganbright) மற்றும் அந்த சகோதரன் இப்பொழுதுதான் மேடையை விட்டு சென்றார்கள்... பாதி நேரங்களில் அவருடைய பெயர் என் நினைவுக்கு வருவதில்லை. ["மென்டன்ஹால்" என்று ஒரு ஆசி] மென்டன்ஹால். மற்றவர்கள்... சகோதரன் கூறுகிறார் அவர்கள்....நாங்கள் இப்பொழுதுதான் எங்கள் கூடாரங்களை இங்கே போட்டோம். கடந்த ஆண்டு நாங்கள் ஜெர்மனியில் இருந்த போது இதை நாங்கள் திட்டமிட்டோம். மேலும் என்னுடைய புஸ்தகங்களில் ஒன்றை ஜெர்மென் மொழியில் மொழி பெயர்த்த சகோதரன் ஒருவரை இங்கே நான் சந்தித்தேன் என்று நம்புகிறேன், இப்பொழுது தான் அவர் என்னோடு கைக்குலுக்கினார். என் அன்பார்ந்த சகோதரனே, அதை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். 4. நிச்சயமாக ஜெர்மானிய ஜனங்களால் எங்களுக்கு ஒரு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஜெர்மனை பற்றியும் நான் சொல்ல வேண்டியவனா யிருக்கிறேன். என் மனைவி ஜெர்மனை சார்ந்தவள், எனவே நான் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நான் ஒரு ஐரிஷ் மனிதனாயிருப்பதால் (Irishman), உங்களை சமநிலையில் வைத்துக் கொள்ள நீங்கள் ஒரு ஜெர்மானியரை விவாகம் செய்துக்கொள்ள வேண்டியிருக்கிறது, உங்களுக்கு தெரியும், எனவே... அங்கே எங்களுடைய ஆராதனைகளில் நாங்கள் மிகவும் மகிழ்ந்தோம். மேலும் கர்த்தர் எங்களை ஆசீர்வதித்தார். நாங்கள் சுவிட்சர்லாந்திற்கு (switzerland) சென்றோம். அது ஜெர்மனியின் ஒரு பாகமே. அவர்கள் ஒரே பாஷையை பேசுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆகவே நாமும்... அவர்கள் அங்கே சில நன்மையானவைகளை கொண்டிருந்த னர், கர்த்தர் அதை எங்களுக்காக செய்தார்; பத்து இரவுகளில் ஐம் பதாயிரம் ஆத்துமாக்கள் என்று நான் நினைக்கிறேன். திரும்பவும் ஜெர்மனி, லாசென்னுக்கு (Lausanne) வந்தபோது, கிறிஸ்துவுக்கென இன்னொரு ஐம்பதாயிரம் ஆத்துமாக்கள். அமெரிக்காவை குறித்ததான காரியம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. சில சமயங்களில் நான் வியப்பதுண்டு. மற்ற தேசங்கள் இப்பொழுது வெளியே கால் பதிக்க போகிறார்கள் போன்று தோன்றுகிறது, உங்களுக்கு தெரிந்த முதல் காரியம், அவற்றின் முதற்பலனாக உள்ளே வர போகிறார்கள். 5. நம்முடைய கூட்டம் சுகமளித்தல் ஆராதனைக்கு போதுமான அளவு பெருகும் வரையில், மேலும் என்னுடைய ஆராதனைகள் என் மீதே அதிக பாரத்தை வைக்கிறதாயிருக்கிறது, ஏனெனில் அது தரிசனங் களாயிருக்கிறது. பெரும்பாலான நேரங்களில், அது பெருங் கூட்டத்திற்கு சுகமளிக்கிறதாயிருக்கிறது. ஆயிரம் பேர் அமர்ந்திருப்பர், அதில் ஒருவர் கூட பெலவீனமாக விடப்படமால் இருந்த நேரத்தை நான் பார்த்திருக்கிறேன். பாருங்கள்? அது ஒரு... நாங்கள் விரும்புகிறோம், நாங்கள் ஆராதனைகளை ஒழுங்கு செய்யும்போது, இருந்தால்... நாங்கள் இருந்தால் அல்ல... நான் சுகமளிக்கும் கூட்டங்களை கொண்டிருந்தேன்; அங்கே ஒரே மனிதன் இருப்பான். அதெல்லாம் பொருட்டல்ல. ஆனால் நாங்கள் பேசுவதற்கென சில இரவுகளை எடுத்துக் கொள்ள விரும்புகிறோம். இந்த ஆராதனைகளில் நான் முயற்சி செய்தேன் -- இன்றைக்கு ஜனங்களுக்கு எது மிகவும் தேவையாக இருக்கிறது என்று நான் கருதுகிறேனோ அதை ஜனங்களுக்கு கொண்டு சேர்க்க முயற்சி செய்கிறேன். நான் ஒரு போதகன் அல்ல. நான் ஒரு வேதபாடம் படித்தவன் அல்ல. எனக்கு எந்த கல்வியும் கிடையாது, ஆனால் நான் - நான் சில சமயங்களில் ... நான் இதைக் கூறட்டும்: இந்த புஸ்தகத்தை பற்றி மிக அதிக மாக எனக்கு தெரியாது, ஆனால் இதின் ஆக்கியோனை நான் நன்கு அறிவேன். எனவே அது... உங்களுக்கு தெரியுமா, நான் நான் அவருடன் பழகி சமாதானமாக இருக்கவே விரும்புகிறேன். ஆகவே நான், அப்படி செய்யும்போது, முன்னேற்றத்திற்காக ஏதோவொன்றை பொருத்த முயற்சிக்கிறேன். 6. நான் நம்புகிறேன், அமெரிக்கா, எழுப்புதலுகென்று தனக்கு கிடைத்த எல்லா மகத்தான சந்தர்ப்பங்களிலும், இன்னும் தொடர்ந்து மோசமாகி கொண்டே இருப்பதை நான் பார்த்த பிறகு ... அது அது என்னை எச்சரிக்கிறது. இது என்னுடைய தேசம், நான் இங்கே பிறந்தேன், நான் இதை நேசிக்கிறேன். நம்மால் கூடுமானால் கூடுமானால் ஒரு மகத்தான எழுப்புதலை நான் - நான் என்னுடைய நாளில் காண வாஞ்சிக்கிறேன். இப்பொழுது, அந்த மகத்தான எழுப்புதலை என்னால் கொண்டுவர முடியாது, எந்தவொரு ஊழியக்காரராலும் கொண்டு வர முடியாது. ஆனால் தேவன் அதை கொண்டு வரும் போது நம்முடைய பங்கை நாம் செய்வோம். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கிருக்கிறது. 7. கடந்த இரவு நான் சகோதர சிநேகத்தை பற்றி பேசினேன். இன்றிரவு, நான் "கிறிஸ்துவுடன் ஒரு உள்ளான ஜீவியம்" என்ற பொருளின் பேரில் பேச விரும்புகிறேன். நாளை இரவு, தேவனுக்கு சித்தமானால்... முன்கூட்டியே நான் எதையும் தியானிக்கவில்லை; நீங்கள் வழி நடத்தப்படும்படியே அது வரவேண்டும், ஏனெனில் நான் குறிப்புகளிலிருந்து பிரசங்கிப்பதில்லை, ஆனால் நான் அதை பெற்றுக்கொள்ளும்படியே... நாளை இரவு பெந்த கோஸ்தே சபை எங்கே தன்னுடைய தவறை செய்தது என்று நான் நினைக்கிறேனோ அதை பற்றி பேச விரும்புகிறேன், கர்த்தருக்கு சித்தமானால். அது நான் அதை செய்வேனா இல்லையா என்று தெரியாமலேயே முன் அறிவிக்கிறதாயிருக்கிறது. ஆனால் கர்த்தர் அதை அனுமதிப்பார் என்று நான் நம்புகிறேன். நீங்கள் என்னோடு கூட சற்று பொறுத்திருந்தால். என்னுடைய சிறந்ததை நான் முயற்சிக்கிறேன்... என்னால் ஜனங்களை மட்டும் காண முடிந்தால் தேவனுடைய இந்த மகத்தான அசைவை... என்னுடைய கருத்தின்படி, நம்மிடம் பொதுவான ஒன்றுள்ளது, அது - அது, இயேசு கிறிஸ்துவும் மற்றும் தேவனுடைய இராஜ்ஜி யமுமே. மேலும் நம்மில் ஒவ்வொருவரும், நாம் எந்த சபையை சேர்ந்தவர்கள் என்று பார்க்காமல், ஜனங்கள் நம்முடைய குறிப்பிட்ட சபையை சேர்ந்தவர்களா அல்லது இல்லையா என்று பார்க்க முயற்சிக்காமல், அவர்களை இரட்சிக்கப்பட்டவர்களாக, அவர்கள் தேவனோடு சரியானதை செய்கிறார்கள் என்பதை பார்க்கும் நோக்கத்தை உடையவர்களாய் நாம் ஒன்றிணைந்து வேலை செய்ய வேண்டும். நாம் எந்த சபையை சேர்ந்தவர்கள் என்று பார்க்காமல், ஒன்று சேர்ந்து வேலை செய்யவேண்டும் அந்த நோக்கதிற்காக, அதாவது ஜனங்கள் நம்முடைய குறிப்பிட்ட சபையை சேர்ந்தவர்களா அல்லது இல்லையா என்று பார்க்காமல், அவர்களை இரட்சிக்க பட்டவர்களாக, மேலும் அவர்கள் தேவனோடு சரியானதை செய்கிறவர்களாக காண்பதே. பல நேரங்கள் இருந்ததுண்டு, பலதரப்பட்ட ஸ்தாபனங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஜனங்கள்... "நீங்கள் இந்த ஸ்தாபனத்திற்கு செல்லுங்கள்" என்று ஒரு முறை கூட நான் கூற முயற்சித்ததில்லை, ஏனெனில் அவர்கள் ஒவ்வொருவரும் பெற்றிருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்... அவர்கள் முயற்சி செய்கின்றனர் அல்லது - தங்களின் அறிவின்படி எது சரியோ அதை செய்கின்றனர். அவர்களுக்கு குறிப்பிட்ட காரியங்கள் போதிக்கபட்டிருக் கிறது. ஒருவேளை சிலர் மற்றவர்களை விட சிறிது ஆழமாக நடக்கிறார்கள். உங்களை விட சிறிது ஆழமாக நடக்ககூடிய யாரையாவது நீங்கள் பார்த்தால், ஏன், அல்லது அதுபோன்று இருப்பவரை நான் பார்த்தால், அவரின் வழியில் குறுக்கே நிற்க நான் முயற்சிக்கமாட்டேன். 8. யோசுவா நடந்து சென்ற இடத்திற்கு அல்லது ஏனோக்கு நடந்து சென்ற இடத்திற்கு என்னால் நடக்க முடியவில்லையென்றால், ஏனோக்கு ஒரு நாள் மத்தியான வேளையில் தேவனோடு கூட ஒரு சிறிய உலா (stroll) சென்றான், அப்பொழுது அவன் நீண்ட நாள் வாழ்ந்திருந்ததால் களைப்படைந்திருந்தான், எனவே ஒரு மத்தியான வேளையில் அவன் அவரோடு கூட நடந்து வீட்டிற்கு சென்றான். என்னால் அதுபோன்று நடக்க முடியவில்லையென்றால், அது போன்று நடக்ககூடியவர்களின் வழியில் நான் குறுக்கே நிற்க விரும்பமாட்டேன். அவர்கள் முன்னேறி செல்வதற்கு உதவி செய்யவே நான் விரும்புவேன். ஆகவே அது - அந்த இலக்கு தான் நம்மிடம் இருக்க வேண்டும். எனவே ஜனங்களை தொடர்ந்து வெளியே அழைத்து வாருங்கள், சுகமளித்தல் ஆராதனை இன்னும் ஒன்று அல்லது இரண்டு இரவுகளில் நடைபெறும் என்று அவர்களிடம் கூறுங் கள். அப்பொழுது நாம்... 'ஏனெனில், ஆரம்பித்த பிறகு, அது தரிசனங்களின் சுழற்சியிலிருக்கும். எனக்கான அறையில் அவர் கள் என்னை வைத்திருப்பார்கள். ஒருவேளை நாம் அந்த பகுதிக்கு வரும்போது, அதை நான் விளக்குவேன். இன்... இன்றைக்கு, பாவிகள் ஒன்றாக வந்து கிறிஸ்து இயேசுவில் தங்களுடைய ஸ்தானங்களை கண்டறிந்து பொருத்தப்படவும், கிறிஸ்துவின் சரீரத்தின் ஒற்றுமைக்காகவும் நாம் இழுக்க முயற்சிக்கிறோம். மேலும் இன்றிரவு ஒரு சிறிய செய்திக்கு, நாம் அதை விளக்கி அதிலிருந்து சில பின்னணியை வெளியே கொண்டு வர முயற்சித் தோமானால்... உங்களை வெகு நேரம் வைத்திருக்கமாட்டேன், ஏறக்குறைய ஒரு முப்பது அல்லது நாற்பது நிமிடங்கள் மட்டும். பின்பு, நாளைய இரவை மறந்து விடாதீர்கள்... கர்த்தருக்கு சித்தமானால், வேத வாக்கியங்களை கொண்டு நான் முயற்சி செய்ய விரும்புகிறேன்... ஒவ்வொரு... 9. நான் ஒரு அடிப்படைவாதி. ஒவ்வொன்றும் வேதாகமத்தில் இருந்துதான் வர வேண்டும். நான் அதை விசுவாசிக்கமாட்டேன் என்று என்னால் கூறமுடியாது, ஆனால் அது வேதாகமத்திலிருந்து வரவில்லையென்றால் என்னால் அதை புரிந்துகொள்ள முடியாது. எந்த நேரமாக இருந்தாலும், சுகமளித்தல் ஆராதனையின் பிரதான (phenomenal) பகுதியில் - அந்த நேரத்திலும், எந்த நபராக இருந்தாலும், நீங்கள் எதை சார்ந்தவர்களாக இருந்தாலும், எந்த சபையாக இருந்தாலும், நீங்கள் பார்க்கும் ஏதோவொன்றில் கேள்வி எழுந்தால், அது - நான் - நாங்கள் செய்வதில் கேள்வி எழுந்தால், அது வேதாகமத்தில் இல்லையென்றால், நல்லது, அப்பொழுது நீங்கள் -நீங்கள் என்னிடம் வாருங்கள். ஏனெனில் இந்த புஸ்தகத்துடன் நிச்சயமாக நான் சரியாயிருக்க விரும்புகிறேன். ஏனெனில் இது தான் அஸ்திபாரம். எல்லா வேத வாக்கியங்களும், பரிசுத்த ஆவியின் எல்லா செயல்களும் பரிசுத்த வேதாகமத்தில் இருந்துதான் வரவேண்டும், அப்பொழுதுதான் நான் அதை விசுவாசிப்பேன். இப்பொழுது, வேதாகமத்தில் இல்லாதவொன்றையும் அவரால் செய்ய முடியும். அது இன்னும் தேவனாகவே இருக்கும். ஆனால் அது சரியாக வேதாகமத்திலிருந்து வந்தால் என்னால் அதை இன்னும் சிறப்பாக புரிந்துகொள்ள முடியும். அதை அந்த விதமாகவே நான் விரும்புகிறேன், 'ஏனெனில் அப்படி வரும்போது அது சரி என்பதை நான் அறிவேன். 10. இப்பொழுது எபிரேயர் புஸ்தகத்தில், 10-ஆம் அதிகாரம், 19- ஆம் வசனம் முதல், நான் ஒரு வேதவாக்கியத்தின் பகுதியை வாசிக்கிறேன், 19 மற்றும் 20 வசனங்கள். ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்ப தற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணின படியால், அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத் தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், இப்பொழுது, கர்த்தர் தாமே வாசிக்கப்பட்ட வார்த்தையோடு கூட தம்முடைய ஆசீர்வாதங்களை கூட்டுவாராக. இப்பொழுது, ஒரு நிமிடம் ஜெபத்திற்காக நம்முடைய தலைகளை தாழ்த்துவோம். 11. ஒரு சகோதரன் - சில நிமிடங்களுக்கு முன்பு ஒரு சிறிய குறிப்பை என்னிடம் கொண்டு வந்தார். அதை என்னால் படிக்க முடியாமல் போயிற்று. அது இன்றிரவு இங்கேயிருக்கும் ஒரு சிறிய சீமாட்டியுடைய யாரோ ஒருவரை, அல்லது நண்பரை, அல்லது மருத்துவமனையில் இருக்கும் மிகவும் மிகவும் வியாதியாயிருக்கும் ஒருவரை பற்றியது, அது ஒரு குழந்தையோ அல்லது பிள்ளையோ அல்லது யாரோ ஒருவர் மரணத்தின் அருகாமையிலிருப்பதை பற்றிய குறிப்பு அது. இப்பொழுது, அந்த குழந்தையிடமிருந்து அல்லது யாராக இருந்தாலும் அவரிடமிருந்து தேவன் அந்த மரணத்தின் கையை தடுப்பார் என்று நாம் அனைவரும் ஒன்றாக ஒருமனப்படுவோம். அது எவ்வளவு நேசிக்கபட்டதாயிருக்கும். நண்பர்களே, அவரால் அதை செய்ய முடியும். சரியாக இங்கே இருக்கும் பள்ளத்தாக்கில், சில வருடங்களுக்கு முன்பு ஒரு மரித்த குழந்தையை என்னிடம் கொண்டு வந்தனர். சான் பெர்னார்டினோவில் (San Bernardino) உங்களுக்கு நினைவிருக்கிறதா. அந்த காலையிலிருந்து அது மரித்த நிலையிலிருந்தது, என்னுடைய உடலை கிடத்தி, ஜெபித்தேன்... இல்லை, என்னுடைய உடலால் ஒன்றுமே செய்ய முடியாது, ஆனால் இயேசுவிடம் ஜெபம், அந்த சிறிய குழந்தை விழித்து ஜீவனுக்கு வந்தது. 12. ஆகவே இப்பொழுது ஜெபத்திற்காக நம்முடைய தலைகளை தாழ்த்துவோம். எங்களுடைய அன்பான பரலோக பிதாவே, இன்றிரவு உம்முடைய நேசகுமாரன் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தால் நாங்கள் உம்மிடம் வருகிறோம், அவருடைய நாமத்தால் நாங்கள் எதைக் கேட்டாலும் அதை பெற்றுக் கொள்வோம் என்பதை அறிந்தவர்களாய் வருகிறோம். எங்களிடம் தனிப்பட்ட வல்லமை ஏதும் இல்லை என்பதை அறிந்தவர்களாய், எங்களால் ஒன்றையும் செய்ய முடியாது, அவரு டைய நன்மைகளை கொண்டு மட்டுமே நாங்கள் வருகிறோம், பிதாவே உம்மிடம் இந்த வேண்டுகோளோடு நாங்கள் வருகிறோம், அது என்னெவெனில்: முதலாவதாக, எங்களுடைய எல்லா பாவங்களையும் எங்களுக்கு மன்னியும், உமக்கு விரோதமான எங்களுடைய மீறுதல்களை, நாங்கள் செய்த காரியங்களை அல்லது நாங்கள் பேசிய சரி இல்லாத காரியங்களை எங்களுக்கு மன்னியும். பிதாவே, உம்முடைய குமாரன் கர்த்தராகிய இயேசுவின் இரத்தம் இப்பொழுது எங்களை எல்லா அநீதியிலிருந்தும் சுத்திகரிக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். எங்களின் சிந்தையினூடாக கடந்து சென்ற எல்லா பொல்லாத சிந்தனைகளும் மன்னிக்கபடுவதாக, இன்றிரவு கூட்டத்திற்கு எந்த விதத்திலாவது தடையாய் இருக்கும் எதுவும் மன்னிக்க படுவதாக. நாங்கள் கேட்கும் காரியங்களை நீர் மன்னிக்கும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். 13.மேலும் இப்பொழுது, பிதாவே, இன்றிரவிற்கான வார்த்தையை உம்முடைய பரிசுத்த ஆவி தன் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொள்ள வேண்டுமென நாங்கள் கேட்கிறோம்... விசுவாசம் கேள்வியினால் வரும், தேவனுடைய வசனத்தை கேட்பதால் வரும். மேலும் வார்த்தைக்குள்ளாக வாரும். பிதாவே இன்றிரவு நாங்கள் ஜெபிக்கிறோம், ஒவ்வொரு இருதயத்தையும் திறந்து, வித்தை ஆழமாக கொண்டு செல்லும். இதை அளியும், கர்த்தாவே. எங்களுக்கு ஒரு உண்மையான ஒரு அஸ்திபாரத்தை தாரும், அதாவது வியாதியஸ்தருக்காக நாங்கள் ஜெபிக்க ஆரம்பிக்கும் போது, இந்த தேசமானது இதுவரை கண்டிராத ஒரு மகத்தான அசைவை பெறட்டும் - இந்த தேசத்தின் வரலாற்றில் இல்லாத ஒரு அசைவை பெறட்டும். இதை அளியும், கர்த்தாவே, நாங்கள் இங்கே இருப்பதால் அல்ல, ஆனால் பிதாவே நீர் மகிமையை பெற்றுக் கொள்ளும்படியாய் நாங்கள் விரும்புகிறோம். இதை செய்யும், செய்ய மாட்டீரா? மேலும் இன்றிரவு அந்த சிறிய சீமாட்டி இந்த குறிப்பை அனுப்பியிருக்கிறாள். தேவனே, எனக்கு அவளை தெரியாது, உமக்கு அவளை தெரியும். யாரோ ஒருவர் மிக நோயுற்றவராய் மருத்துவமனையில் இருக்கிறார், மரண தருவாயில். இரக்கத்தின் தூதனை நீர் கீழே அனுப்ப மாட்டீரா, அது ஜீவிக்கும்படி அந்த நபர் ஜீவிக்கும்படி, ஏனெனில் அது யாரோ ஒருவர் மிகவும் உத்தமமாக வந்து கேட்டிருக்கிறார். அதை அளியும், கர்த்தாவே. ஜெபம் காரியங்களை மாற்றட்டும். பிதாவே, ஒருமுறை நாங்கள் வேதாகமத்தில் வாசித்திருக்கிறோம், அங்கே நீர் உம்முடைய தீர்க்கதரிசியை, எசேக்கியா என்னும் நாமமுள்ள ஒரு மனிதனிடம் அனுப்பி, அவன் மரிக்க போகிறான் என்று கூறினீர். ஆனால் அவன் தன் முகத்தை சுவர் பக்கமாக திருப்பி, மனங்கசந்து அழுதான், அவன் கூறினான், "கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதை செய்தேன் என்பதை நினைத்தருளும்" என்றான். அவன் தன்னுடைய ஜீவியத்திற்கு பதினைந்து வருடங்கள் வேண்டுமென்று விரும்பினான். தேவனே, நீர் உம்முடைய தீர்கதரிசியிடம் பேசி, அவனை உடனே திரும்ப அனுப்பி, 'உன் விண்ணப்பத்தை கேட்டேன் என்று சொல்" என்று கூறினீர். மரணத்திலிருந்து ஜீவனுக்கு, ஏனெனில் ஜெபம் காரியங்களை மாற்றுகிறது. இன்னும் ஒரு விசை, தேவனே, இன்றிரவு அதை அளியும்? அந்த ஒருவர் ஜீவிக்கட்டும். 14. அந்த செய்தியை கொண்டு வந்தவரையும், இங்கே வியாதியோடும் தேவையோடும் இருப்பவர்களையும், இன்றிரவு இந்த இடம் முழுவதும் இருக்கும் எல்லாரையும் ஆசீர்வதியும், அவர் களோடு கூட இரும். இப்பொழுதும், பிதாவே, உம்முடைய அப்பிரயோஜனமான ஊழியக்காரனை வார்த்தையின் பின்னாக நீர் மறைத்து கொள்ளும் படி நாங்கள் ஜெபிக்கிறோம். உம்முடைய வார்த்தை முன்னே சென்று இருதயத்திற்குள் மூழ்கட்டும். உம்முடைய நேசகுமாரன் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 15. இப்பொழுது, ஒவ்வொரு இரவும் கர்த்தர் உங்களை ஆசீர்வதி ப்பாராக. இப்பொழுது, உத்தமமாக ஜெபியுங்கள், ஜெபிக்க மட்டும் செய்யாமல், நீங்கள் எதற்காக ஜெபிக்கிறீர்களோ அதை பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள். இப்பொழுது பல நேரங்களில் ஜனங்கள் இவ்வாறாக சிந்திப்பதுண்டு, "ஓ, எனக்கு இன்னும் கொஞ்சம் விசுவாசம் இருந்தால்" என்று. நான் - நான் அதை சந்தேகிக்கிறேன். நீங்கள் போதுமான விசுவாசத்தை பெற்றிருக்கிறீர்கள்; உங்கள் விசுவாசத்தை வைத்து என்ன செய்வது என்பதை அறிந்துகொள்ள உங்களுக்கு இன்னும் கொஞ்சம் அதிக ஞானமே அவசியமாயிருக்கிறது; அவ்வளவு தான். உங்களிடம் போதுமான விசுவாசமிருக்கிறது. அதை எப்படி கிரியையில் கொண்டு வருவது என்பது மட்டுமே உங்களுக்கு தெரியவில்லை. அது சரி. அது அதை செய்யும். இன்றிரவு இங்கே சுகமளித்தலுக்கான போதுமான விசுவாசமில்லாமல் உங்களில் யாரேனும் இருக்கிறார்கள் என்று நான் நம்பவில்லை, உங்களிடம் என்ன தவறு இருந்தாலும் அது ஒரு பொருட்டே அல்ல, அதைப் பெற்றுக்கொள்ளும்படியான சரியான வழியை மட்டும் நீங்கள் அறிந்திருந்தால் போதும். 16. மேலும் இப்பொழுது, பிரதிஷ்டைப்பண்ணப்பட்ட ஒரு ஜீவியத்தை பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். கடந்த இரவு நான் உங்களிடம் இரத்தத்தினூடாக ஐக்கியம் என்பதை பற்றி பேசினேன், எப்படியாய் தேவன் மனிதனை இரத்ததின் மூலம் திரும்பவும் ஐக்கியத்திற்கு கொண்டு வந்தார் என்று பேசினேன். இன்றிரவு "கிறிஸ்துவில் மறைவான ஓர் ஜீவியம்" என்பதின் பேரில் நான் பேச விரும்புகிறேன். இப்பொழுது, பழைய ஏற்பாட்டில், வாசஸ்தலத்திற்கு பிரகாரங்கள் இருந்தன என்று எந்த ஒரு வேத மாணாக்கனுக்கும் தெரியும். அது வெளிப்பிரகாரங்கள், திரைச்சீலை, பரிசுத்த ஸ்தலம் மற்றும் மகா பரிசுத்த ஸ்தலம். நான்... அவை யாவும் வேதாகம போதனையில் இருக்கிறது... நான் மாதிரியை வைத்து ஒப்பிட்டு பேசுபவனாயிருப்பதால் (typologist), எனக்கு எப்பொழுதுமே பழையதை மாதிரியாக வைத்து புதியதோடு ஒப்பிடுவது பிடிக்கும், அல்லது அதை என்னுடைய ஜனங்களுக்கு கொடுக்க பிடிக்கும்... ஆகவே அந்த... ஒருவேளை அவர்க ளில் சிலர் சரியாக படிக்க தெரியாதவர்களாய் இருக்கலாம். அது... ஆனால் ஒரு மாதிரியை வைத்து போதிக்கும்போது, நீங்கள் அதை ஒப்பிட்டு அந்த நிழலாட்டத்தை காணலாம், பழையது புதியதற்கு நிழலாயிருக்கிறது. அப்படி செய்யும் போது அது ஒரு கதை வடிவிலிருக்கிறது. அப்பொழுது உங்களால் அதை மறக்கவே முடியாது, ஏனெனில் அது உங்களிடம் ஏதோவொன்றை கட்டவிழ்த்து காண்பிப்பது போல் வருகிறது. 17. இப்பொழுது, பழைய ஏற்பாட்டில், பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டிற்கு மாதிரியாயிருக்கிறது, வாசஸ்தலத்தின் உட்பிரகார கிரியைகள், தேவனுடைய மனிதர்களுக்கு இன்றைக்கான இரட்சி ப்பின் திட்டதிற்கு ஒரு அழகான காட்சியாயிருந்தது. இப்பொழுது இதைக்கொண்டு மாத்திரம் நாம் கற்றுக்கொண்டால், தேவன் நமக்காக பண்டக சாலையில் வைத்திருப்பதை பெற்றுக் கொள்ளும் அந்த நிலைக்கு நாம் எப்படி செல்வது என்பதை மாத்திரம் நாம் கற்றுக்கொண்டால், அது இங்கே இருக்கும் முழு பள்ளத்தாக்கையும் சுத்திகரித்துவிடும். பாருங்கள்? ஆனால், நீங்கள் எதற்காக மற்றும் எப்படி வருகிறீர்கள் என்பதை பற்றி எப்பொழுதும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதை நீங்கள் சிந்திக்கவில்லையா? எந்தவொன்றையும் அணுகும் விதத்தை நீங்கள் அறிந்தி ருக்க வேண்டும். என்னுடைய நாளில் நான் இராஜாக்களுக்காக ஜெபித்ததுண்டு. நான் இராஜாவின் முன்பு நடந்தபோது, அவர்கள் எப்படியாய் என் கால் சட்டையின் பட்டைகளை எடுத்தனர் என்பதை நான் கவனித்தேன். நான் ராஜாவின் முன்பு முதுகுகாட்ட கூடாது என்றனர்; ஆனால் நான் கிளம்பும்போது, பின்னாகவே வர வேண்டும். அது ஒரு குறிப்பிட்ட விதமான அணுகு முறை. இல்லையேல் நீங்கள் கண்டிக்கப்படுவீர்கள். நீங்கள் நீதிமன்ற இடங்களுக்கு வந்து நீதிபதியுடன் பேசவிருக்கும் போது, நீங்கள் வெறுமனே "ஏய் நீதிபதி, உன்னுடன் ஒரு நிமிடம் நான் பேச விரும்புகிறேன்" என்று கத்த மாட்டீர்கள். பாருங்கள்? நீங்கள் அளிக்கப்பட்ட வழியில் வரவேண்டும், உரிய வழியில் வர வேண்டும்: "கனத்திற்குரிய நீதிபதி அவர்களே..." என்று. அதே போன்று, தேவனை நாம் எப்படி அணுக வேண்டுமென்று தேவனே அருளிய உரிய திட்டத்தினூடாக அவரை சந்திக்க வேண்டும். நாம் மட்டும் அவரை அந்த திட்டத்தினூடாக அணுகி, அதை சரியாய் செய்தால், நிச்சயமாக தேவனுக்கென்று ஒரு ஜனக்கூட்டத்தை நாம் பெறுவோம். 18. இப்பொழுது, வெளிப்பிரகாரங்கள் என்று அவர்களால் அழை க்கப்பட்டது பழைய ஏற்பாட்டில் அங்கே இருந்தது. வெளிப்பிர காரங்களில் என்ன இருந்தன என்பதை நாம் கவனிக்கிறோம். அடுத்து ஒரு பரிசுத்த ஸ்தலம் இருந்தது அல்லது முதலாவது திரை இருந்தது, அடுத்து உள்ளே மகா பரிசுத்த ஸ்தலம் இருந்தது. வெளிப்பிரகாரத்தில் என்ன பணிமுட்டுகள் இருந்தன, அதில் என்ன இருந்தன... திரையில், பரிசுத்த ஸ்தலத்தில், மகா பரிசுத்த ஸ்தலத்தில் என்ன இருந்தன... இப்பொழுது, இன்றிரவு மகா பரிசுத்த ஸ்தலத்தை பற்றி நாம் பேச போகிறோம், அந்த வாசஸ்தலத்தில் தேவன்தாமே வாசம் பண்ணினார். அந்நாட்களில், அவர் தம்முடைய கூடாரத்தில் வாசம் பண்ணினார். மேலும் இன்றைக்கு தன்னுடைய கூடாரமாக அவர் உன்னிலே வாசம் பண்ணுகிறார். ஆனால் நாம் இந்த இடத்தை வாசஸ்தலமாக்க வேண்டும், வெளிப்பிரகாரமாகவோ அல்லது முதலாவது பரிசுத்த ஸ்தலமாகவோ அல்ல. ஆனால் நாம் தேவனோடுகூட மகா பரிசுத்த ஸ்தலத்தில், ஒரு பிரதிஷ்டைப் பண்ணப்பட்ட, மறைவான ஜீவியத்தில், தனிமையில், தேவனோடுகூட அமைதியாக ஜீவிக்க வேண்டும். நாம் பல காரியங்களில் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறோம். மிகவும் மனம் உடைந்து போகிறோம். ஏதோவொன்று அங்கு இல்லை என்பதையே அது காண்பிக்கிறது. சபையானது இப்பொழுது இருப்பதைக் காட்டிலும் பத்து லட்சம் மைல் தூரம் சாலையின் மேலே இருக்க வேண்டும். பிரதிஷ்டைப்பண்ணப் பட்டவர்களாய் தேவனோடு கூட மகா பரிசுத்த ஸ்தலத்தில் மறைந்திருக்க வேண்டியவர்களாகிய நாம், இன்னமுமாக இளமை பருவத்திலேயே இருக்கிறோம், வம்பிழுப்பதிலும், சண்டையிடுவதிலும், சச்சரவுகளிலும், கோபப்படுவதிலுமே இருக்கிறோம். நாம் பொறுமையாக வந்து, நம்முடைய நேரத்தை எடுத்துக் கொண்டு, நாம் எங்கே போகிறோம் என்பதை பார்ப்பது நல்லது. 19. இப்பொழுது, அதில்... தேவன் அந்த மூன்று பிரகாரங்களில் ஜீவிக்கிறது போன்று, அவர் நிச்சயமாகவே சபையாரின் பிரகாரத் திலும் ஜீவிக்கிறார். அவர் அதில் ஜீவித்தார்... அவர் இங்கே பரிசுத்த ஸ்தலத்திலும் ஜீவிக்கிறார். ஆனால் அவருடைய நிரந்தர வாசஸ்தலமோ... இங்கிருப்பதெல்லாம் மகா பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கும் அவருடைய பிரசன்னத்தின் தன்மைகளே. இப்பொழுது, இது உங்களை போன்றது. நீங்கள் வேதாகம த்தை கவனித்தால், கணிதரீதியாக பேசுகிறேன், மூன்று என்பது தேவனுடைய பரிபூரணமான எண். தேவன் மூன்றில் பரிபூரண படுகிறார். தேவத்துவம் மூன்றில் பரிபூரணப்படுகிறது: பிதா, குமரன் மற்றும் பரிசுத்த ஆவி, அந்த ஒரே உண்மையான தேவன். யுகங்கள் மூன்றில் பரிபூரணப்படுகிறது. மூன்று, ஏழு, பன்னிரண்டு, இருபத்தி நான்கு, நாற்பது மற்றும் ஐம்பது இவையெல்லாம் தேவனுடைய கணித எண்கள். இவை வேதாகமம் முழுவதிலும் இருக்கிறது. கவனியுங்கள். இப்பொழுது, நீங்களுமே, நீங்களும் மூன்றில் பரிபூரணப் படுகிறீர்கள்: ஆத்துமா, சரீரம், ஆவி; ஜலம், இரத்தம் மற்றும் ஆவி. அவருடைய சரீரத்திலிருந்து வந்த மூன்று காரியங்கள் புதிய பிறப்பை ஏற்படுத்துகிறது. அவருடைய சரீரத்திலிருந்து வந்த அந்த மூன்று காரியங்கள் புதிய பிறப்பை ஏற்படுத்துகிறது: ஜலம், இரத்தம், ஆவி. இயற்கையான பிறப்பை ஏற்படுத்தவும் அதே காரியங்களே தேவைப்படுகிறது. சகோதரர்கள், சகோதரிகள், பிள்ளைகள், குழந் தைகள் மற்றும் பல்வேறுப்பட்ட ஜனங்கள் இங்கே கலந்து இருக் கிறீர்கள் (mixed audience), இருந்தும், மருத்துவர் கூறுவதை நீங்கள் கேட்கிறீர்கள். நான் உங்கள் சகோதரன். ஒரு குழந்தை பிறக்கும் போது, இயற்கையான பிரசவத்தில், முதலாவது ஜலம், பின் இரத்தம், பின்பு ஜீவன், ஆவி வருகிறது. 20. அந்த அதே காரியங்கள்தான் புதிய பிறப்பிற்கும் தேவையா யிருக்கிறது: ஜலம், இரத்தம் மற்றும் ஆவி: விசுவாசத்தால் நீதிமா னக்கப்படுதல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பது, இரத்தத்தால் கழுவப்படுதல், பரிசுத்தமாக்கபடுதல், பின்பு பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம், இவை யாவும் உங்களை மகா பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கிறது. இப்பொழுது, தேவனிடமிருந்து பிரிந்து கிறிஸ்துவில் மறைந்திருக்கும் அந்த - அந்த மனிதனை அவையாவும் உருவாக்குகின்றது. நான் இதை மரியாதையோடு கூறுகிறேன், நம்மில் அநேகர் இன்னும் பிரகாரங்களில் விளையாடிக் கொண்டிருக்கிறோம். பாருங்கள்? கிறிஸ்துவோடு மறைந்திருக்கும்படி நாம் ஜீவிப்பதில்லை. ஆவியின் கனிகள் அதை நிரூபிக்கிறது. உங்களுக்கு புரிகி றதா? அதாவது... நாம் ஜீவிக்கிறோம் என்று நாம் நினைக்கலாம், ஆனால் உங்களுடைய ஜீவியத்தின் அளவு அதோடுகூட பொருந்தும்வரை... அதுதான் அதை நிரூபிக்கிறது. இயேசு கூறினார், "அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்" என்று. அவர்களுடைய ஸ்தாபனங்களால் அல்ல, ஆனால் அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள். 21. ஆவியின் கனியோ அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, நற்குணம், தயவு, பொறுமை, சாந்தம், இச்சையடக்கம்: ஆவியின் கனிகள். பரிசுத்தவான்கள் ஜனங்களுக்கும் (Holiness People) [ஸ்தாபனத்தின் பெயர்-ஆசி] கால்வனிஸ்ட்களுக்கும் என்ன தேவை என்பதை தேவன் அறிந்திருக்கிறார்... அவர்கள் எல்லாருக்கும் இன்று ஆவியின் கனி இன்னும் அதிகமாக தேவையாயிருக்கிறது, அதை நிருபிக்க அதிக ஜீவியங்கள் தேவையாயிருக்கிறது. பல சாட்சிகள் நம்மிடம் இருந்தன, ஆனால் பழைய கூற்று என்னவென்றால், "உன் ஜீவியம் அதிக சத்தமாய் பேசுவதால், உன் குரலை என்னால் கேட்க முடியவில்லை" என்பதே. நாம் எல்லா மனுஷராலும் வாசிக்கப்படும் தேவனுடைய எழுதப்பட்ட நிரூபங்களாயிருக்கிறோம். இது இல்லை... இங்கே சில காலத்துக்கு முன்பு, ஒரு சுவிசேஷகர் நகரத்திற்கு வந்தார். மனிதன் ஒருவன் கூறினான், "ஓ, வாருங்கள்". மிக அதிக உற்சாகத்துடன் கூறினான், "இந்த மனிதனுக்கு செவிகொடுங்கள்" என்றான். அவன் கூறினான், "நல்லது, அதை செய்ய நான் விரும்புகிறேன்"ஆனால் கூறினான், "உனக்கு தெரியுமா, இன்றிரவு எங்கள் சொந்த சபையில் எங்களுக்கு ஆராதனைகள் இருக்கிறது" என்றான். எனவே கூறினான், "நாளை இரவு உன்னுடன் நான் வருகிறேன்" என்றான். கூறினான், "ஓ, நீ அடுத்த வாரம் போகலாம்" என்றான். அவன் கூறினான், "ஆனால் எங்கள் சொந்த சபையில் எங்க ளுக்கு ஆராதனை இருக்கிறது, எனவே அந்த மனிதன் கூறுவதை கேட்க நாளை இரவு போகிறேன்" என்றான். ஓ, ஆனால் இந்த மனிதன் ஒரு - ஒரு நல்ல மனிதன்" என்றான். "இந்த மனிதன் அருமையாக பேசுபவர்" என்றான். அவன் கூறினான், "நல்லது, நீ கூறுவதில் ஒரு வார்தையை கூட நான் சந்தேகிக்கவில்லை, அந்த மனிதன் ஒரு அருமையான மனிதன் என்பதை." ஆனால், "உனக்கு தெரியுமா, நான் என் பாஸ்டருடைய பக்கத்து வீட்டில் வாழ்கிறேன்" என்றான். 22. நான் கூறுவது புரிகிறதா. அது உங்கள் ஜீவியமாயிருக்கிறது. நாம் மிகவும் வைத்தீகமானவர்களாயிருக்கலாம் (orthodox). அது தான் இங்கே கலிபோர்னியாவில் நமக்கு அதிக பிரச்சனையாயிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். நாம் மிகவும் வைத்தீகமாயிருக்கிறோம். அது சரி என்று நான் நினைக்கிறேன். இதுவரை இருந்ததிலேயே மிக வைத்தீகமாயிருக்கிறோம், ஆனால் எழுத்து சரியானதுதான், ஆனால் அது கொல்லும்; ஆனால் ஆவியோ ஜீவனைக் கொடுக்கும். சரியான ஜீவியத்தை அளிக்கும் சரியான ஆவியை பெற்றுக்கொள்ளுங்கள். பாருங்கள்? உங்களிடம் சரியான ஜீவியமிருக்க வேண்டும். இப்பொழுது, வெளியிலே... இங்கே பூமியில் உங்கள் ஜீவியத்தில் உங்களுக்கு இருப்பது போன்றே, நீங்கள் மூன்று அறை உள்ள வீட்டில் வசிக்கிறீர்கள். நீங்கள் அதை அறீவீர்களா? ஓ, நீங்கள் கூறலாம், "சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் கூறுவதிலிருந்து நான் வேறுபடுகிறேன்" என்று. இல்லை, நீங்கள் வேறுபடவில்லை. நீங்கள் மூன்று அறை உள்ள வீட்டில்தான் வசிக்கிறீர்கள். உங்களிடம் இருக்கலாம்... உங்களுக்கு சமையலறை இருக்கிறது; உங்களுக்கு வசிக்கும் அறை (living room - Hall Ed) இருக்கிறது; உங்களுக்கு படுக்கையறையும் இருக்கிறது. ஓ, மூன்று அல்லது நான்கு படுக்கையறை இருக்கலாம், மேலும் இரண்டு அல்லது மூன்று சமையலறை இருக்கலாம். ஆனாலும் நீங்கள் இன்னும் அந்த மூன்றில் தான் வாழ்கிறீர்கள். அதைதான் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். கவனியுங்கள், அது சரி. நல்லது, தேவனும் மூன்று அறையுள்ள வீட்டில் தன்னுடைய கூடாரத்தில் வாசம் செய்தார். சபையார், சபையாரின் பிரகாரங்கள்; பரிசுத்த ஸ்தலம்; மற்றும் மகா பரிசுத்த ஸ்தலம். மேலும் நிகழ்காலத்தில், அப்பொழுதிருந்த மூன்று அறைகள் எதை பிரதிபலிக்கிறது. கிறிஸ்துவோடு கூட முழுவது மாக பிரதிஷ்டை பண்ணப்பட்ட ஸ்தலத்திற்கு நீங்கள் வரும் கட்டங்களை போன்றே,. சமயலறையில்தான் நீங்கள் சாப்பிடுவீர்கள். பாவி கூட்டத்திற்கு வருகிறான்; அவன் வார்த்தையினால் விருந்து சாப்பிடுகிறான். விசுவாசம் கேள்வியினால் வரும், வார்த்தையை கேட்பதால் வரும். அவன் வார்த்தையை கேட்க வருகிறான். 23. பல நேரங்களில், குறிப்பாக இன்றைக்கு வார்த்தை இருக்க வேண்டிய இடத்தில் மிக அதிகமானவைகளை வார்த்தைக்கு பதிலாக மாற்றி வைக்கிறோம். நாம் மிகமிக மகத்தானதிற்கு பதிலாக வேறொன்றை வைக்கிறோம். தேவையே இல்லாத மிக அதிகமான காரியங்களை நாம் மாற்றி வைக்கிறோம் (substituting). என்னவாக இருந்தாலும், வார்த்தையை பிரசங்கிப்பதற்குதான் சபை இருக்கிறது. சாட்சி கூறுவது சரிதான், நாம் செய்யும் மற்றவைகளும் அருமையானவைகள் தான், ஆனால் நாம் வார்த்தைக்கு தான் முதல் ஸ்தானத்தை அளிக்கவேண்டும் ஏனெனில் அது பாவிகளுக்கானது மேலும் அது பரிசுத்த ஆவியை பெற்ற ஜனங்களுக்கும் கூட இயேசு கூறினார், சாத்தான் அவரை சோதித்தபோது அவர் கூறினார், "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். பாருங்கள்? பரிசுத்த ஆவி தேவனுடைய வார்த்தையினால் போஷிக்கப்படுகிறது. அந்த பரிசுத்த... அவர் வார்த்தையை எடுத்து உங்கள் இருதயத்தில் பொருத்துகிறார், அது உங்களை பெலத்தோடு, நல்ல வேதாகம வெளிப்பாட்டோடு வளர செய்கிறது. அதை நான் நேசிக்கிறேன். வேதாகமத்தை எடுத்து அதை வெளியே காட்டும் ஒரு நல்ல வேதாகம போதகர் பேசுவதை உட்கார்ந்து கேட்க நான் விரும்புகிறேன். பின்பு அதோடு கூட இரக்கம் மற்றும் சாந்தத்தின் ஆவி அங்கேதான் அந்த நல்ல மிருதுவான நிலத்தில் அது வேர் விட்டு, வளர ஆரம்பிக்கிறது. 24. இப்பொழுது, நாம் சமயலறையில் சாப்பிடுகிறோம். அங்கே தான் பாவி வார்த்தையை கேட்க வருகிறான். விசுவாசம் கேள்வியினால் வரும். அவன் வார்த்தையை கேட்ட பிறகு, அடுத்து அவன் சபையின் ஐக்கியத்திற்குள் வருகிறான். அவன் வார்த்தையை கேட்டு அதை பெற்றுக்கொண்ட பிறகு, அப்பொழுது நீங்கள் அவனுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறீர்கள், கிறிஸ்தவ ஞானஸ்நானம், அது அவனை ஐக்கியத்திற்குள் கொண்டு வருகிறது. அப்பொழுது அவன் சபை ஜனங்களோடு சேர்ந்து கொள்கிறான். அங்குதான் நீங்கள் உங்கள் வீட்டின் வரவேற்பறைக்கு (parlor hall) வருகிறீர்கள், அங்கே நீங்கள் உங்கள் அருகாமையில் இருப்பவர்களோடு ஐக்கியம் கொள்ள மற்றவைகளை செய்ய சமயலறையிலிருந்து வரவேற்பறைக்கு வருகிறீர்கள், வரவேற் பறையில் ஐக்கியம் கொள்கிறீர்கள். ஆனால் அதன்பின் உங்கள் படுக்கையறைதான் உங்களின் இளைப்பாறும் ஸ்தலமாயிருக்கிறது. சோர்வான நாளின் எல்லா பிரயாசங்களுக்கு பின்பும், அந்த அறையில் தனியாக இளைப் பாருகிறீர்கள். என்னுடைய வீட்டில், ஜெப அறைதான் படுக்கை அறையாயிருக்கிறது. பல நேரங்களில் நான் சிறிய பழைய வீடுகளுக்குள் சென்று, தாய்மார்களும் மற்ற பலரும் சிறிய பழைய கட்டம்போட்ட ஏப்ரானுடன் (Apron - உடை - ஆசி) அழுதுகொண்டு அவர்களின் கண்களை துடைத்த படியே படுக்கையறையிலிருந்து வெளியே வருவதை பார்த்திருக்கிறேன்; ஜெபித்துக்கொண்டு, இரகசிய ஸ்தலத்திலிருந்து, சந்திக்கும் ஸ்தலத்திலிருந்து, தேவனோடு கூட ஓ, தங்குவதற்கு தனியாக, தனிமைப்படுத்தப்பட்டவர்களாய். அது ஒரு அற்புதமான இடம். மனிதன் தன்னுடைய ஜீவியத்தை இந்த மற்ற இடங்களிலிருந்து எப்பொழுதாவது வெளியே எடுத்து அதை கிறிஸ்துவுக்கென்று பிரதிஷ்டைப்பண்ணப்பட்ட ஸ்தலத்திற்குள் கொண்டு செல்லும்போது... 25. கவனியுங்கள், ஒவ்வொரு வருடமும் பிரதான ஆசாரியன் அந்த ஸ்தலத்திற்குள் பிரவேசித்தான். சபையார் அவனை பின்தொடர்ந் தார்கள். அவன் இந்த மகத்தான ஸ்தலத்திற்குள் பிரவேசித்தப் பிறகு, அங்கே அந்த திரைச்சீலை அவனுக்குப் பின்னாக இறக்கப்படும். உட்பிரகாரங்களுக்குள், அந்த மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள், யாரும் அவனுக்கு பின்னாக போக துணிய மாட்டார்கள். அப்பொழுது அவன் தேவனோடு கூட தனியாக இருந்தான். இன்றைக்கு பிரதிஷ்டைப் பண்ணப்பட்ட ஒர் ஜீவியத்திற்கு அது என்னே ஒரு அழகான காட்சியாயிருக்கிறது, உலக காரியங்க ளுக்கு மரித்தவர்களாய், தேவனோடுகூட மறைந்துக்கொள்ள, யாரேனும் கிறிஸ்துவுடன் ஒரு முறை உள்ளே சென்று விட்டால், அப்பொழுது அந்த திரைச்சீலை சுற்றிலும் கீழே இறக்கப்பட்டு, முழு உலகமும் துண்டிக்கப்படுகிறது. அதன்பின் கிறிஸ்தவமும் மார்க்கமும் ஒவ்வொரு விசுவாசிக்கும் இன்பமாகிறது. அவர்கள் நரகத்திலிருந்து தப்பும் முயற்சியில், இதைத் தான் செய்ய வேண்டும் என்பதை அவர்கள் அறிந்தவர்களாய், தங்களை பரிதபிக்கபடத்தக்க நிலைக்குள்ளாக்க போதுமான மார்க்கங்களை ஜனங்கள் இன்றைக்கு வைத்திருக்கிறார்கள். நல்லது, அதை பற்றி நான் அவ்விதம் உணர்ந்தால், சகோதரனே, நான் என்ன செய்வேன் என்று எனக்கு தெரியவில்லை. ஒ கிறிஸ்துவோடு உள்ளே வந்து விடுங்கள். உலக காரியங்களிலிருந்து துண்டித்துக்கொள்ளுங்கள், ஏனெனில், அவருடன் பேசுவது இன்பமாயிருக்கிறது. அது அழகானது. அது ஆத்துமாவை நிரப்பி திருப்தியாக்குகிற ஏதோவொன்றாயிருக்கிறது. எல்லா புத்திக்கும் மேலான சமாதானத்தை தருகிற ஏதோவொன்றாயிருக்கிறது. எல்லா சிலுவைகளும் பறக்கும் செட்டைகளாகி விடும். எல்லா சுமைகளும் இரதத்தின் சக்கரங்கள். ஓ. உங்களால் பறக்க முடியும். 26. "என் சுமைகள் இலகுவாயும் இருக்கிறது". அவரோடு நுகத்தில் இணையுங்கள், அந்த நுகமெல்லாம் அல்லேலூயாக்களால் மிருதுவாக்கப் பட்டிருக்கிறது. ஒருமுறை அந்த திரைச் சீலைக்குள் நீங்கள் அவரோடு இருந்துவிட்டால், அவர் உங்கள் ஜீவனாகி விடுவார். அதை தீர்க்கதரிசி இதில் கூறியுள்ளான்... பழங்காலத்து ஜனங்கள் கூறினார்கள் நான்... அதாவது அவர் தன்னுடைய நியாயபிர மாணத்தை புதிதாக எழுதி, அவர் அதை அவர்களுடைய இருதயத்தில் வைப்பார் என்பதே. இப்பொழுது, சீனாய் மலை கடமையின் ஸ்தலமாயிருந்தது. ஆனால் கல்வாரிமலையோ கிருபையின் ஸ்தலமாயிருந்தது. ஜனங்கள் இன்னமும் சீனாய் மலையிலேயே ஜீவிக்க முயற்சிக்கின்றனர். "நான் சபைக்கு சென்றால், நான் என்னுடைய கடமைகளை செலுத்தினால், நான் இதை செய்தால் அல்லது அதை செய்தால், நான் இதை விட்டுவிட்டால் மேலும் அதை நிறுத்தி விட்டால்". அவர்கள் இன்னும் சீனாய் மலையிலேயே இருக்கிறார்கள். நீங்கள் மரித்த இடத்திற்கு நீங்கள் வரும் போது, மேலும் உங்கள் ஜீவியம் கிறிஸ்துவின் மூலமாக தேவனோடு மறைந்து, பரிசுத்த ஆவியினால் முத்திரைப்போடப்படுகிறது, முழு கிறிஸ்தவ ஜீவியமும் ஒரு மகத்தான மகிமையான ஆரவாரமாகவும், அல்லேலூயாவாகவும் உங்களுக்கு மாறுகிறது. மேலும் நீங்கள் தினம் தினம் மறைந்து கொள்கிறீர்கள். இப்பொழுது, நாம் கவனிக்கிறோம் அங்கே ஒருமுறை, அவன் உலகத்தினின்று தனிமைப்படுத்தப்படுகிறான். அந்த திரைச்சீலை அவனை சுற்றிலும் கீழே இறக்கப்பட்டு, மேலும் அவன் தேவனோடு மறைந்து கொள்கிறான். ஒவ்வொன்றுமே உண்மையாக, மகிமையாகிவிடுகிறது. இந்த ஸ்தலத்தில் நாம் கிறிஸ்துவோடு ஒருமுறை மறைந்துக் கொள்ளும்போது, அப்பொழுதிலிருந்து ஒவ்வொன்றுமே நமக்கு புதிதாகிவிடுகிறது. 27. இந்த இடத்தில்தான் ஆரோனின் கோல் வைக்கப்பட்டது என்று நாம் நினைக்கிறோம்; அங்கே தான் மன்னாவும் இருந்தது. மன்னா... இந்த மன்னா எனும்பொருளை புரிந்துக்கொள்ள நாம் பழைய ஏற்பாட்டிற்கு திரும்ப செல்ல வேண்டும். இஸ்ரவேல் புத்திரர்கள் எகிப்திலிருந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு இடையே யாத்திரையிலிருந்தபோது, அவர்களை ஜீவனோடு காக்கும்படி மன்னா விழுந்தது. இன்றைக்கு எகிப்திலிருந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு யாத்திரையில் இருக்கும் சபைக்கு அது என்னே ஒரு அழகான மாதிரியாயிருக்கிறது. நாம் நம்முடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? கானான் பரலோகத்தை பிரதிபலிக்கவில்லை. ஏனெனில் கானானில் அவர்களுக்கு யுத்தங்களிருந்தது. கானான் ஆயிர வருட அரசாட்சியை பிரதிபலித்தது. ஆகவே நாம் ஆயிர வருட அரசாட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். அவர்களின் பாதை நெடுக அவர்களின் எல்லா தேவைகளையும் சந்திப்பதாக தேவன் வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார், அதே போன்று நம்முடைய பாதை நெடுகவும் எல்லா தேவைகளையும் சந்திப்பதாக அவர் வக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். சிவந்த சமுத்திரத்தின் வேறுபிரிக்கும் கோட்டினை அவர்கள் கடந்த மாத்திரத்தில், அவர்களுக்கு அப்பம் தேவையாயிருந்த போது, தேவன், அவர் அதை வானத்திலிருந்து வருஷிக்க பண்ணினார். அவர்களுக்கு சுகமளித்தல் தேவையாயிருந்த போது தேவையாயிருந்தபோது, தேவன், மோசேயை கொண்டு ஒரு சர்பத்தை உயர்த்தினார். அவர்களுக்கு இறைச்சி தேவையாயிருந்த போது, அவர் காற்றை வீசி அந்த - அந்த பறவைகளை கொண்டு வரும்படி செய்தார். 28. அவர் எப்பொழுதுமே பார்த்துக் கொள்கிறார். அவர் யேகோவா-யீரேவாக இருக்கிறார், கர்த்தரால் அளிக்கப்பட்ட பலி. அவர் யேகோவா-ரப்பாவாக இருக்கிறார், சுகமளிக்கும் கர்த்தர். மேலும் அவர் எப்பொழுதுமே பார்த்துக்கொள்கிறார். மேலும், அவர்களுக்கு அவர் எப்படி கடமைப்பட்டிருந்தாரோ அதுபோன்றே இந்நாளில், நமக்கும் அவர் கடமைப்பட்டிருக்கிறார். அவர்களை அவர் எப்படி இயற்கை ரீதியில் நடத்தினாரோ, அதுபோன்றே இன்றைக்கு சபையை ஆவிக்குரிய ரீதியில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு வழி நடத்துகிறார். நமக்கு தேவையான ஒவ்வொன்றுமே நமக்கு வாக்குத்தத்தம் பண்ணபட்டிருக்கிறது, நாம் யாத்திரையில் தொடர்ந்து சென்று, நம்முடைய கண்களை தேவன் மீதே வைப்போமானால் நாம் அதை பெற்றுக்கொள்வோம். நீங்கள் கவனிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன், ஜனங்கள் வெளியே சென்று மன்னாவை புசித்தபோது, அது கிறிஸ்துவிற்கு மாதிரியாயிருந்தது, அவர் கீழே வந்து தன்னுடைய சொந்த ஜீவனை அளித்ததிற்கு மாதிரியாயிருந்தது... ஆனால் காலை வேளையில் அந்த மன்னாவை புசித்த ஜனங்கள், அதை நீங்கள் சீக்கிரம் எடுக்கவில்லையென்றால், அந்த மன்னா பகல் பொழுதிலே பழையதாகி விடும். இப்பொழுது, அது ஒரு அடையாளமாயிருக்கிறது அல்லது ஜனங்களுக்கு மாதிரியாயிருக்கிறது, கிறிஸ்துவிடம் வரும், மாற்ற ப்பட்ட (regenerated) மனிதன், தன் ஜீவனை உள்ளே தருகிறான், ஆனால் ஒரு போதும் பரிசுத்த ஆவிக்குள் மறைவதே இல்லை. அவன் மன்னாவை புசித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்த ஒரு ஜீவியத்தை அவன் ஜீவிக்கிறான். வெளிப்பிரகாரத்தை தாண்டி, அந்த திரைச்சீலையை தாண்டி தூரம் செல்லாத பல ஜனங்கள் இன்றைக்கு இருக்கிறார்கள். இருந்தாலும், அவர்கள் கிறிஸ்தவர்கள், அவர்கள்... பல லட்சம் மைல்கள். அவர்கள் கிறிஸ்துவின் வெளிப்புற தோற்றத்தில் மகிழ்கிறார்கள். தாங்கள் சபையை சேர்ந்தவர்கள் என்ற ஆறுதலோடு அவர்கள் சபைக்கு செல்கின்றனர். ஆனால் ஒருபோதும் அவர்கள் அவரோடு உட்பிரகாரங்களில் மறைந்து கொண்டதே இல்லை. ஆனால் வெளியேஅவர்கள் மன்னாவை புசித்தனர். ஆனால் கவனியுங்கள். நீங்கள் அந்த மன்னாவை புசிக்கும்போது, நீங்கள் கவனிக்கவில்லையென்றால், அந்த நாள் முடிவதற்கு முன்பு, அந்த மன்னா சுருங்கி (dwindled) போய்விட்டிருக்கும். வெறுமனே வெளியே சுற்றிகொண்டிருக்கும் ஜனங்களுக்கும் அது அப்படியே இருக்கிறது. ஒருவேளை மன்னாவை புசித்து மகிழலாம் ... 29. மன்னா பரிசுத்த ஆவிக்கு மாதிரியாயிருக்கிறது. இந்த யாத்தி ரைக்கு தேவன் மன்னாவை அளித்தபோது... அவர் அதை இன்னொரு யாத்திரையில் அளித்தபோது, அது அவர்கள் யாத்திரை முழுவதும் அவர்களுக்கு இருந்தது. அது பெந்தெகொஸ்தேவிற்கு (Pentecost) ஒரு அழகிய மாதிரியாக இருந்தது. தேவன் தன்னுடைய சபையை வெளியே அழைத்து, அவர்களுக்கு பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை அளித்தபோது, உன்னதத்திலிருந்து அவர் தன்னுடைய ஆவியை சபையின் மீது பொழிந்தார், இயேசு வரும் வரை எல்லா சந்ததிகளுக்கும் அது இருக்கும். சரி. இன்றைக்கு சபைக்கான மன்னா அதுதான், பரிசுத்த ஆவியின் மன்னா. நினைவில் கொள்ளுங்கள், அவர்கள் தண்ணீரை கடந்து, தங்களுடைய யாத்திரையில் மறுபக்கத்திற்கு வந்தபோது, பரிசுத்த ஆவியானவர் மன்னாவை பொழிந்து, அவர்களை இயற்கையாக போஷித்தார். அது அவர்களை இயற்கையான ஜீவியத்தில் தளராமல் தொடர செய்தது. ஒரு மனிதன் தன்னுடைய சுயத்திற்கு மரித்து, கடந்து உள்ளே - அவனுடைய வாக்குத்தத்தம் பண்ணப் பட்ட தேசத்திற்கு யாத்திரை செய்யும்போது, இன்றைக்கும் தேவன் பரிசுத்த ஆவியை பொழிகிறார். 30. பெந்தெகொஸ்தே (Pentecost) நாளில் பேதுரு கூறினான், அவன் கூறினான், "தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்ட படியே இது நடந்தேறுகிறது, 'கடைசி நாட்களில்' தேவன் உரைக்கிறார், 'நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்'' என்று. அவன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்துடன் பிரசங்கித்தபோது... மேலும் ஜனங்கள் உரக்க சத்தம்மிட்டவாறு செயல் முறையில் செய்துக் கொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் இருதயங்களில் குத்தப் பட்டவர்களாய், யூதர்களும் மற்றும் அங்கே நின்றவர்களும், கூறினார்கள், "மனுஷர்களே சகோதரர்களே, இரட்சிக்கப்பட நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்றனர். பேதுரு அவர்களை நோக்கி: "நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வர வழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது" என்றான். அவன் என்ன கூறினான்? பெந்தகோஸ்தே நாளில் பொழிந்த அந்த பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் உங்களுக்கும், உங்களுடைய பிள்ளைகளுக்கும், தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது. 31. அந்த மன்னா முதலில் விழுந்தபோது, தேவன் மோசேயிடம், "இப்பொழுது, இது பகல் பொழுதிலே வாடி போய்விடும்" என்றார். ஆனால் கூறினார், "இப்பொழுது, நீ வெளியே போய் ஒரு தங்க ஓமர் எடுத்து வந்து, அதில் இந்த மன்னாவை முழுவதுமாக நிரப்பி, அதை மகா பரிசுத்த ஸ்தலத்தில் வைப்பாயாக, அது ஒவ்வொரு... வருகின்ற உங்கள் எல்லா சந்ததிகளும், ஒரு மனிதன் இந்த திரைக்குள் பிரவேசிக்கும்போது, மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு பின்னாக, ஒரு ஆசாரியனாக பிரவேசிக்கும் போது, ஆதியில் விழுந்த அந்த அசலான மன்னாவை ஒரு வாயளவு எடுத்துக் கொள்ள அவனுக்கு உரிமையிருக்கிறது" என்றார். இன்றைக்கு ஒரு அழகிய மாதிரியாயிருக்கிறது, பேதுரு கூறிய போது, "இது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது". 32. இப்பொழுது, நாம் ஏதோ ஒருவிதமான அலங்காரத்தை பெற்றிருக்க தேவையில்லை, ஒருவிதமான உணர்வு சார்ந்த அல்லது மனம் சார்ந்த அலங்காரங்களை பெற்றிருக்க தேவையில்லை. பிசாசு கொடுக்கும் எந்தவொன்றையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் பலிபீடத்திலிருந்து பிரதிஷ் டைப்பண்ணப்பட்ட ஜீவியத்திற்கு, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்கு வரும் ஒவ்வொரு விசுவாசியும், ஒரு வாயளவு மட்டுமல்ல ஆனால் ஒரு ஆத்துமா முழுவதும், பெந்தெகொஸ்தே நாளில் விழுந்த அந்த உண்மையான பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெற்றுக்கொள்ளலாம். பெந்தெகொஸ்தே நாளில் கிடைத்த அதே பலன்களை அது கொண்டு வரும். ஆமென். வாக்குத்தத்தமானது உங்கள் பிள்ளைகளுக்கும், உங்கள் பிள் ளைகளின் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது. சகோதரர்களே, பெந்தெகொஸ்தே நாளில் விழுந்த அதே பரிசுத்த ஆவி, அதுதான் அப்பொழுதிருந்த பலன்களை கொண்டுவந்தது, கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தின் மூலமாக, மகா பரிசுத்த ஸ்தலதிற்குள் செல்லும்படி, தன்னுடைய ஜீவியத்தை பிரதிஷ்டை பண்ண விரும்பும் ஒவ்வொரு விசுவாசிகளுக்கும் அது அதே பலன்களை கொண்டுவரும். அது பாரம்பரியங்களை உடைத்துப்போடும்; அது மனிதர்களின் இருதயங்களை மாற்றும். அது உங்களை கிறிஸ்து இயேசுவிற்குள் ஒரே நபராக உருக்கி, பழைய பாணியிலான, இந்த தேசம் முழுவதும் பரவும் எழுப்புதலை அனுப்பும். ஆமென். இன்றைக்கு நம்முடைய தேவை என்ன: நமக்கு பழைய பாணியிலான, தேவனால் அனுப்பப்பட்ட, பரலோகத்திலிருந்து வாங்கின, பரிசுத்த ஆவியினால் நடத்தப்படும் எழுப்புதலே தேவை. ஏதோ சிறிய உதறல்களோ, அல்லது சிறிய உணர்வு சார்ந்த கிரியைகளோ தேவையில்லை. ஆனால் பழைய பாணியிலான மரித்துப்போகிற, சுய-பிரதிஷ்டை பண்ணுகிற (அல்லேலுயா). கரடுமுரடான, உண்மையான, பாவத்தை கொல்லும் மார்க்கமே தேவை. ஆமென். அது உங்களுக்கு வெள்ளையடிக்காது; அது உங்களை கழுவி வெள்ளையாக்கும். பிசாசு தன்னால் முடிந்த எல்லாவற்றிற்கும் வெள்ளையடிப்பான், ஆனால் தேவனோ கழுவி வெள்ளையாக்கு கிறார். இன்றைக்கு நமக்கும் அதுதான் தேவையாருக்கிறது, ஒரு பழைய பாணியிலான தேவனால் அனுப்பப்பட்ட எழுப்புதல், அது ஜனங்களுடைய இருதயங்களை அப்படியே உடைத்து, இந்த எல்லா ஸ்தாபனங்களையும் தேவனுடைய மகிமைக்காக மகத்தான பெரிய ஒரு ஒருங்கிணைந்த கூட்டமாக சேர்க்கும். அதுதான் இன்றைக்கு சபைக்கும் தேவையாயிருக்கிறது. மேலும் அது கலிபோர்னியாவை மட்டுமல்ல, அது தேசத்தையே அசைக்கும். 33. இன்றைக்கு நாம் முன்னேராததற்கு காரணம் என்னவென்றால், மிக அதிகமாக வறண்ட கண்களோடு அறிக்கை செய்பவர்களையும், சபையை சேர்ந்துகொள்பவர்களையும், வெதுவெதுப்பான வர்களையும், பின்வாங்கி போன சபை அங்கத்தினர்களையும் நாம் கொண்டிருப்பதே. அதுதான் உண்மை. ஜனங்களை வித்தியாசமாக செயல்பட வைக்க, வித்தியாசமாக பார்க்க வைக்க, வித்தியாசமாக நடக்கவைக்க, வித்தியாசமாக பேசவைக்க, வித்தியாசமாயிருக்க வைக்க, தங்களுடைய ஒவ்வொரு நாள் ஜீவியத்திலும் வித்தியாசமாக ஜீவிக்க வைக்க, பழைய பாணியிலான, தேவனால் அனுப்பப்பட்ட பரிசுத்த பவுலின் எழுப்புதலும் மற்றும் வல்லமையுடன் கூடிய வேதாகம பரிசுத்த ஆவியும், உடைக்கப்படுதலுமே நமக்கு மிக அதிகமாக தேவையாயிருக்கிறது. நண்பர்களே, அது நமக்கு தேவை. மெத்தோடிஸ்டுகளுக்கு அது தேவை. பாப்டிஸ்டுகளுக்கு அது தேவை. பெந்தெகொஸ்தேயினருக்கு அது தேவை. அவர்கள் அனைவருக்கும் அது தேவையாயிருக்கிறது. அது சரி. நாம் தவறான பக்கத்திற்கு கொண்டு செல்கிறோம். நாம் தவறான காரியத்தை பின் தொடருகிறோம். பரிசுத்த ஆவியானது ஒவ்வொரு சந்ததியிலும் தொடர வேண்டியிருந்தது. மோசே, அந்த பெரிய பானையை அங்கே வைத்தபோது, சில நேரங்களில் வெளியே விடப்பட்ட இந்த அப்பம்... சில நேரங்களில் ஜனங்களுக்கு பாளைய மைதானத்தில் சுளுக்குகள் ஏற்பட்டது. 34. இன்றைக்கு நம்முடைய சபையிலும் அதேதான் காரியம் என்று நான் நினைக்கிறேன். நாம் அதுபோன்று மிக அதிகமாக தள்ளிவைப்பதற்கு சென்றுவிட்டோம். அது சரி. சில ஜனங்கள் தங்களை சரி செய்வதற்கு மட்டும் போதுமான மன்னாவை சாப்பிட்டு மேலும் இன்னும் கொஞ்சத்திற்காக பசியடைகிறார்கள். ஒரு எழுப்புதலுக்கு முன் இன்னொன்று, நீங்கள் வெளியே சென்று மறுபடியும் புதுப்பிக்க பட வேண்டியிருக்கிறது. சகோதரனே, நீ ஏன் அந்த முட்டாள்தனத்தை நிறுத்திவிட்டு, கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தால் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் வரக்கூடாது. இங்கே வெளியேயிருக்கும் ஒவ்வொரு பிடி மன்னாவும் உன்னை இன்று இரவு வரையோ அல்லது நாளை வரையோ மட்டுமே நிலைத்திருக்க வைக்கும்; அடுத்த வாரம் அது கிரியை செய்யாது. அது ஒரே இரவிலே காய்ந்து போய்விடும். ஆனால் நாட்கள் வந்து போனாலும், வருடம் வந்து போனாலும், மன்னா புதிதாகவே இருக்கும் இடத்திற்கு, மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் வருவதற்கு எப்பொழுதாவது உன்னையே நீ பிரதிஷ்டைசெய்தாயானால்,... அங்கே எப்பொழுதாவது உள்ளே நடந்த அந்த மனிதனை நீங்கள் சந்திக்கலாம்... அவன் ஆறு மாதங்களாக எழுப்புதலில் இல்லாவிட்டாலும் எனக்கு கவலையில்லை; அவன் எழுப்புதல் நாளின் போது எப்படி இனிமையாக இருந்தானோ அப்படியே இன்னும் இருப்பான். அது சரி. அவனை நீங்கள் ஒரு இக்கட்டான நாளிலோ அல்லது குழப்பமான நாளிலோ அல்லது நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அழைக்கும் நாளிலோ அவனை நீங்கள் சந்திக்கலாம்; அவன் மாறாமல் இருப்பான், ஏனெனில் அவன் தேவனுடைய மகிமையில் ஜீவிக்கிறான். மன்னா எப்பொ ழுதும் புதிதாகவே இருக்கும் இடத்தில் அவன் ஜீவிக்கிறான், அப்பொழுது வெளியே சென்று இந்நாள் முழுவதும், நாளைய தினம் முழுவதும் ஜெபிப்பது சுமையாயிருக்காது. சகோதரனே, அவரோடுகூட மகா பரிசுத்த ஸ்தலத்தில் எப்பொழுதுமே தரித்திருங்கள். "ஒரு மனிதனால் அந்த விதமாக ஜீவிக்க முடியுமா?" முற்றிலுமாக. அதற்காகத்தான் இயேசு மரித்தார். ஆமென். 35. கவனியுங்கள். அங்குதான் அவர்கள் ஆரோனின் கோலை வைத்தார்கள். வெளிப்பிரகாரங்களில் அல்ல, யாருக்கு எந்த ஆசா ரியத்துவம் என்பதை தேர்ந்தெடுக்க இங்கே உள்ளே வைத்தார்கள். அது நேரடியாக கிறிஸ்துவை பற்றி பேசுகிறது என்பதை நானறிவேன், ஆனால் அது ஒரு பாவிக்கும் மாதிரியாயிருக்கிறது. தன்னுடைய ஜீவியம் முழுவதிலும் சபையில் குழப்பத்தோடு இருக்கும் ஒரு மனிதனை கவனித்துப்பாருங்கள், இன்னமுமாக பாவத்திலும் அக்கிரமங்களினாலும் மரித்திருப்பவனை... ஆனால் அந்த மனிதன் வெளியே இருக்கும் போது, அந்த பழைய கோல், அது வெறும் ஒரு சாதாரண குச்சியே, அது காய்ந்து போகும் வரைக்கும் ஆரோனின் கையில் கொண்டு செல்லப் பட்டிருக்கும்; அதில் ஜீவனே இல்லாதிருந்தது. அதுதான் தேவனிடமிருந்து வெட்டப்பட்ட அந்த மனிதன். அதுதான் கிறிஸ்து இல்லாத அந்த மனிதன். அந்த மனிதன் ஒருவேளை ஒரு சபை அங்கத்தினனாயிருக்கலாம், ஆனால் ஒரு ஹாட்டன்டாட்டிற்கு [ஒரு வகையான ஆப்பிரிக்க பழங்குடியினர் - ஆசி] எகிப்திய இரவை [கதைகள் - ஆசி] பற்றி தெரிந்த அளவு கூட அவனுக்கு தேவனை பற்றி தெரியாது; தொடர்ந்து செல்கிறான். 'ஓ, நான் சபையை சேர்ந்தவன்." அது ஆரோனின் கையிலிருந்தது. ஆம், அவன் உபயோகிக்கப்பட்டான், ஆனாலும் மரித்திருந்தான். அந்த கோல் மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் தேவனுக்கென்று பரிசுத்தம் பண்ணபட்ட இடத்தினுள், பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தில் வைக்கப்பட்ட போது என்ன நடந்தது என்பதை நீங்கள் அறிவீர்களா? அது துளிர் விட்டு, பூப்பூத்து, வாதுமை பழங்களை கொடுத்தது, எல்லாமே ஒரே இரவில். அல்லேலூயா. 36. இன்றைக்கு நமக்கும் அதுதான் தேவையாயிருக்கிறது, மேலே தூக்கப்பட்டு, சபை அங்கத்தினன் என்பதை தாண்டி பரிசுத்த ஸ்தலத்திற்குள், பிரசன்னத்திற்குள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிரதிஷ்டைக்குள் கொண்டுசெல்லப்படுவதே. அது துளிர்விட்டது. அது என்னவாயிருந்தது? அதனிடம் இருந் திருக்க வேண்டிய ஜீவன், அது மரித்திருந்தது. அங்கிருக்கும் அந்த கூடார கொம்பை போல அது இருந்தது. ஆனால் அது ஒரு மரமா யிருந்திருந்தால்... அது ஒரு வாதுமை மரமாயிருந்தது எல்லாம் சரி, ஆனால் அது மரித்திருந்தது. 37. மரித்தவர்களாய், கனிகளே கொடாத பல ஜனங்கள் கிறிஸ்தவத்தை இன்றிரவு அறிக்கை செய்கின்றனர், அவர்களுடைய ஜீவியத் தில் ஒன்றுமே இல்லை. அவர்களுக்கு உதவியும், நம்பிக்கையும் இல்லாதது போன்று தெரிகிறது. தாங்கள் சபையை சேர்ந்தவர்கள் என்பதை மட்டும் அறிந்து, அவர்கள் அலைந்து திரிகிறார்கள். அது பிரஸ்பிடேரியன், லுத்திரன் மற்றும் மற்றவைகளில் மட்டுமல்ல. அது பெந்தெகொஸ்தேவிலும் இருக்கிறது. அது சரி. அது தான் உண்மை. உங்களுக்கு இன்றைக்கு என்ன தேவையென்றால் அது கிறிஸ்துவுக்கு முன்பு வருவதே. என்ன நடந்ததென்று பாருங்கள். இப்பொழுது, முதல் காரியம், அதற்கு வேண்டியிருந்தது - துளிர்விடுவதற்கென அது புதுபிக்கப்பட வேண்டியிருந்தது. அது துளிர் விட்டது. அது துளிர் மட்டும் விடவில்லை, ஆனால் அது பூப்பூத்தது. அது பூ மட்டும் பூக்கவில்லை, ஆனால் அது பழங்களையும் கொண்டு வந்தது. அவ்விதமாகத்தான் நீங்களும் இருப்பீர்கள், அல்லது தன்னை தள்ளிக்கொள்ளும் ஒவ்வொரு விசுவாசியும், வெளியிலிருந்து, அந்த - வெளிப்பிரகாரங்களை விட்டுவிட்டு, கிறிஸ்து இருக்கும் அந்த திரைக்குள், உங்களுடைய ஜீவனை மறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் புதுப்பிக்கப்பட்டு, துளிர்விட்டு, பூப்பூத்து ஆவியின் கனிகளை கொடுப்பீர்கள். ஆமென். உங்களுடைய சமுதாயத்தில் நீங்கள் வேலை செய்கிறவராயிருப்பீர்கள். இயேசுவுக்காக ஆத்துமாவை ஜெயிப்பவராக இருப்பீர்கள். நீங்கள் ஒரு புது மனிதனாயிருப்பீர்கள். பழையதெல்லாம் ஒழிந்து போகும். மனிதனின் பாரம்பரியம் வீழ்ந்து போகும், ஆனால் உங்களுடைய இருதயமோ தேவனுடைய அன்பினால் எரிந்துகொண்டிருக்கும். 38. இந்த இடத்தினுள்தான் அவர்கள் இந்த பழைய கோலை எடுத்து தேவனுடைய பிரசன்னத்தில் வைத்தார்கள்... கேருபீன்களின் மேல் தேவன் மகிமையில் ஜீவிக்கிறார், அந்த கோலுக்கு சம்பவித்தது எல்லாம் ஒரே முறையில் நடந்தது. சகோதரனே, சகோதரியே, பிரதிஷ்டைப் பண்ணப்பட்டு தேவனுக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கும்ஜீவியத்திற்கு, இன்றிரவு நான் இந்த மேடையில் நின்றிருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக அது அவர்களை மாற்றும். அது உங்களிடம் இருக்கும் எல்லா சண்டையையும் வெளியே எடுத்துப் போடும்; உங்களிடம் இருக்கும் எல்லா வேறுபாடுகளையும் வெளியே எடுத்துப் போடும்; அது அந்த - அந்த எல்லா 'isms'- களையும் உங்களை விட்டு வெளியே எடுத்துப்போடும். நீங்கள் அவருடைய பிரசன்னத்திற்குள் மட்டும் செல்வீர்களானால் அது உங்களை ஒரு உண்மையான கிறிஸ்தவனாக்கும். என்ன நடந்தது என்று கவனியுங்கள், ஒரு புத்துணர்ச்சி, ஆறுதல் பெற. கவனியுங்கள், இரவு நேரங்களில் பனி பெய்கிறது. உலகம் அமைதியாயிருக்கிறது. அந்நாள் முழுவதும் இயற்கையின் செயல்பாடுகள்... பிரயாசங்களும் மற்றும் துள்ளல்களும், பிரயாசங்களும்... ஆனால் ஒவ்வொன்றுமே அமைதியான பிறகு, அப்பொழுது என்ன நடக்கிறது? பனி பெய்கிறது. 39. ஒரு காலை பொழுதிலே, நீங்கள் எப்பொழுதாவது அதிகாலையில் எழுந்ததுண்டா, அதிகாலையில் வெளியே சென்று அந்த புத்துணர்ச்சியான காற்றை முகர்ந்ததுண்டா, அது எப்படி இருக்கும் மேலும் ஒவ்வொன்றுமே எவ்வளவு ஆறுதலாயிருக்கும்? பனி பெய்திருக்கிறது. ஒ, சகோதரனே, சகோதரியே, சபைக்கு செல்வது என்பதை மட்டுமே நீங்கள் அறிந்திருந்தால், நான் சேர்ந்து கொண்டேன் அல்லது நான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டேன் என்பதை மட்டுமே நீங்கள் அறிந்திருந்தால், அல்லது அது போன்று ஏதோவொன்றை, நீங்கள் ஏன் உங்களுடைய ஜீவியத்தை கிறிஸ்துவோடு மறைத்துக் கொள்ளக் கூடாது. உலகத்தையும் அதின் எல்லா கவலைகளையும் விட்டு விலகி அமைதியில் தனிமையாக அமருங்கள், என்னே ஒரு ஆறுதல் வரும் என்பதை பாருங்கள். நீங்கள் அறிவீர்கள், அதை குறித்து ஏசாயா ஒருமுறை பேசினான், அவன் கூறினான், "கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம். நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள். பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவேன். கர்த்தருடைய பிரசன்னத்திலிருந்து வரவேண்டிய அந்த ஓய்வுநாள் இதுதான் (அல்லது அந்த ஆறுதல்)." 40. அந்த உயிரற்ற வஸ்து அந்த பிரசன்னத்தில் எப்படியாய் புது பிக்கப்பட்டது.... இன்னொரு காரியத்தை கவனியுங்கள். தேவனு டைய பிரசன்னத்தில் ஒரு முறை நீங்கள் அமைதியாகும் போது. ஒவ்வொன்றை குறித்தும் நீங்கள் அலைப்பாய மாட்டீர்கள். நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்பதை அறிவீர்கள். அங்கே ஏதோவொன்று நடக்கிறது. நீங்கள் ஒரு உண்மையான கிறிஸ்தவன் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களை நேசிக்கும் ஒருவரோடு நீங்கள் தொடர்பில் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இங்கே கீழே ஏதோவொன்று நடந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள், அது ஆறுதலாயிருக்கும். அது மட்டுமல்ல, ஆனால் நீங்கள்- நீங்கள் மற்றவர்களையும் ஆறுதல்படுத்துவீர்கள். இனிமையான ஜனங்களை நீங்கள் சந்தித்திருப்பீர்கள் ஆனால் அவர்கள் அருகில் நிற்க உங்களுக்கு கடினமாயிருந்திருக்கும். அவர்களை பற்றி ஏதோவொன்றிருக்கிறது. அவர்கள் தங்களை சுற்றி சிருஷ்டிக்கும் வல்லமையை கொண்டிருக்கிறார்கள் அது சற்றே வித்தியாசமாய் தோன்றுகிறது. இது கூடுமானால், இங்கே நிறுத்த எனக்கு எவ்வளவு விருப்பம், நிறுத்தி உங்களிடம் அதை பற்றி சிலவற்றை கூறவேண்டும். நீங்கள் நீங்களே ஒரு சிறிய சிருஷ்டிகராயிருக்கிறீர்கள். அவர் ஒரு புதிய ஆவியை உங்களுக்கு கொடுப்பதாக அவர் கூறியிருந்தார். இப்பொழுது, அந்த ஆவி தேவனுடைய ஆவியல்ல; அது உங்களுடைய ஆவியே. தேவன் உங்களுக்கு ஒரு புதிய ஆவியை கொடுக்கிறார், அதன்பின் அவர் கூறுகிறார், "என்னுடைய ஆவியை அவனில் வைப்பேன்" என்று. ஆனால் தேவன் செய்ய வேண்டிய காரியம் என்னவென்றால் உங்களுக்கு ஒரு புது ஆவியை அளிப்பதே, உங்களுடைய சுபாவத்தை இன்னும் கொஞ்சம் அதிக சாந்தமாக்கி அமைதிபடுத்தவேண்டும், இல்லை யென்றால் அவரால் உங்களோடு ஜீவிக்ககூட முடியாது. ஆகவே அவர் உள்ளே வருவதற்கு முன்னரே முதலாவதாக உங்களை அவர் ஆயத்தப்படுத்த வேண்டும். "நான் உனக்கு அளிக்கிறேன் ஒரு - ஒரு புது ஆவியை," அப்பொழுது நீ அவரை எங்கு வேண்டுமானால் அழைத்து செல்லலாம். எவ்விடதிற்கு வேண்டுமானாலும் நீ செல்லலாம். அவர் உங்களை ஆயத்தப்படுத்த வேண்டியிருக்கிறது அதன்பின் அவரை உங்களால் சரியாக கவனிக்க முடியும். 41. ஆகவே அப்பொழுதுதான் நீங்கள் முதலாம் பலிபீடத்தில் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் மறைந்துக் கொள்ளும் போது, அவருடைய ஆவியை நீங்கள் பெற்றுக்கொள்கிறீர்கள். அப்பொழுது அந்த பரிசுத்த ஆவி, வேறு யாருமில்லை தேவனே அவரே வந்து உங்களில் வாசம் செய்வார். அப்பொழுது உங்களை பற்றி ஏதோவொன்றிருக்கிறது, அண்டை வீட்டுக்காரர் உங்களை நேசிப்பார். ஜனங்கள் உங்களை விரும்புவார்கள். இப்பொழுது, நீங்கள் எவ்வளவு கூச்சலிடுகிறீர்கள் அல்லது எவ்வளவு செய்ய முயற்சிக்கிறீர்கள் என்பதெல்லாம் பொருட்டே அல்ல, நீங்கள் ஒரு கிறிஸ்தவன் என்று உங்கள் அண்டை வீட்டுக் காரருக்கு தெரிந்த ஜீவியம் உங்களிடம் இல்லையென்றால், அங்கு ஏதோவொன்று எங்கேயோ தவறாயிருக்கிறது. இப்பொழுது இப்பொழுது, நாம் சற்றே உண்மைக்கு இப்பொழுது வருவோம். அது சரியென்று உங்களுக்கு தெரியும். எந்தவொரு மிக பழங்காலத்திய கூச்சலிடுவதையும், தேவனுடைய ஆசீர்வாதத்தையும், தேவனை துதிப்பதையும் நான் விசுவாசிப்பதைக் காட்டிலும் வேறு யாரும் இந்த உலகத்தில் விசுவாசிக்க மாட்டார்கள். நான் அதை விசுவாசிக்கிறேன். நான் நம்புகிறேன் ஒரு குழந்தை பிறக்கும்போது, அது அசையவில்லையென்றால், அது தேம்பியழவில் லையென்றால், அது எதுவும் செய்யவில்லை யென்றால்... மருத்துவர் வழக்கமாக என்ன செய்வார் என்று உங்களுக்கு தெரியுமா? அவர் அதின் குதிங்காலை பிடித்து தூக்கி, அவனை கொஞ்சம் அடிப்பார், அவன் கொஞ்சம் தானாக சுவாசிப்பான். "நான் மறுபடியும் பிறந்துவிட்டேன்" என்று ஜனங்கள் கூறும் போது இன்றைக்கு சபையிலும் அதேதான் காரியம் என்று நான் நினைக்கிறேன். அது என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அது இறந்த நிலையில் பிறந்த மரித்த குழந்தையாயிருக்கிறது. அதை எழுப்பும்படிக்கும், அதை சிணுங்கி அழுகவைக்கவும் (அது சரி), அது ஜீவனை பெறும்படிக்கும் அதற்கு கொஞ்சம் சுவிசேஷ அடி எப்பொழுதாவது ஒருமுறை தேவைப்படுகிறது. இன்றிரவு நமக்கு அதுதான் தேவை. அதுதான் சபைக்கும் தேவையாயிருக்கிறது, மேலும் சரியான பாதையில் செல்ல ஆயத்தப்படுவதே. அது சரி. 42. கவனியுங்கள். இப்பொழுது கர்த்தருடைய பிரசன்னத்திலிரு ந்து வரும் ஆறுதல், அவர்களை பற்றி ஏதோவொன்று இருக்கிறது. நீங்கள் அருகில் இருக்க விரும்பும் உண்மையான கிறிஸ்தவரை பற்றி ஏதோவொன்று இருக்கிறது. நீங்கள் விரும்பவில்லையா? அங்கே ஒரு வல்லமையிருக்கிறது. உங்களுடன் நான் இன்னும் கொஞ்சம் அதிக பரீட்சியமான பின்பு, எனக்கு தெரிந்து சம்பவித்த சில காரியங்களை உங்களிடம் நான் கூற விரும்புகிறேன். பாருங்கள்? உங்களை சுற்றியிருக்கும் உங்கள் சூழலை நீங்கள் சிருஷ்டிக்கிறீர்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நிச்சயமாக நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். "தேவனால் அனுப்பப்பட்ட மனிதன்" என்ற என்னுடைய புஸ்தகத்தை உங்களில் பலர் வாசித்திருக்கிறீர்கள், இங்கே போர்ட்லேன்ட், ஒரேகனில் (oregan) அந்த இரவில் அந்த வெறிபிடித்த மனிதன் என்னை கொல்வதற்கென மேடைக்கு ஓடி வந்தது நினைவிருக்கிறதா? நீங்கள் அந்த சம்பவத்தை வாசித்திருக்கிறீர்கள், சந்தேகமே இல்லை. என்னே, அது எல்லாவிடங்களிலும் இருக்கிறது. என்ன நடந்தது? நல்லது, அந்த பரிதாபமான ஆள்... அவன் மீது நான் கோபம் கொள்ளவில்லை. நான் அவனை நேசித்தேன். ஏதோவொன்று சம்பவித்தது. நான் அவனை நேசித்தேன். 43. அவன் அங்கே ஓடி வந்தான், சுமார் இருநூற்று ஐம்பது, அறுபது பவுண்டுகள், மிக பெரிய, ஏறக்குறைய ஆறரை அடி, கூறினான், "உன் உடம்பிலிருக்கும் ஒவ்வொரு எலும்பையும் நான் உடைக்கப் போகிறேன்" என்றான். அவனால் செய்ய முடியும். ஆனால் நான் அவனை வெறுக்கவில்லை. நான் அவனை நேசித்தேன். அவனுக்காக நான் பரிதபித்தேன். அவன் கட்டப்பட்டிருந்தான். நான் உரக்க கத்த வேண்டிய அவசியமில்லை. நான் கூறினேன், "சாத்தானே, அந்த மனிதனை விட்டு வெளியே வா" என்றேன். அவன் தரையில் விழுந்தான். அது அவ்வளவுதான். பாருங்கள்? எல்லாம் அவ்வளவுதான். இங்கே சில... பல வருடங்களாக நான் இந்தியானாவில் வன விலங்கு பாதுகாவலனாக இருந்தேன். உங்களில் பலருக்கு அது தெரியும். ஒரு நாள் நான் சென்று, சில மீன்களை ஒரு சிறிய சிற்றோடையில் விட்டேன். நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். நான் ஒரு உள்ளூர் பாப்டிஸ்ட் பாஸ்டராயிருந்தேன். அதற்கு அந்தப் பக்கமாக - அங்கே வழியில் ஒரு வியாதிப்பட்ட மனிதனிருந்தான். நல்லது, நாங்கள் ஒரு துப்பாக்கியை எப்போதும் வைத்திருக்க வேண்டும், ஆனால் துப்பாக்கியை கொண்டு சென்று, யாரோவொ ருவரை சுடுவதற்கென எந்த காரணத்தையும் நான் காணவில்லை. ஆகவே அதை நான் டிரக்கிலேயே (truck) விட்டுவிட்டேன். மேலும் ஆகவே நான் நினைத்தேன், "நான் அங்கே சென்று இந்த சகோதரனுக்காக ஜெபிப்பேன்" என்று. அங்கே இருந்தது... ஒ, சிறிது மைல் தொலைவில், ஒரு கருப்பு நிற மனிதனை அங்கே கொன்ற ஒரு பெரிய வயதான குர்ன்சி (Guernsey) காளை இருந்தது. அவர்கள் அதை விற்க வேண்டியிருந்தது. எனவே அவர்கள் அதை ஹென்றிவில், இந்தியானாவிற்கு அருகில் இருக்கும் ஒரு நகரத்தில் விற்றார்கள், காட்டிற்கு பக்கத்தில். 44. அவர்கள் அதை அங்கே விற்றதை நான் மறந்துவிட்டேன். இந்த மனிதனுக்காக ஜெபிப்பதற்காக நான் அந்த வயல் நிலத்தின் குறுக்காக சென்றேன். நான் அந்த மேய்ச்சல் நிலத்தின் நடுவாக சென்றேன். நான் சென்ற போது, திடீரென்று ஒரு சிறிய புதரிலிருந்து இந்த பெரிய காளை எழுந்தது. அது சரியாக நடுவிலே நின்றது... நான் திரும்பி வேலியை பார்த்தேன்; ஓடிப்போக அது மிக அதிக தூரத்திலிருந்தது, ஏறுவதற்கு மரமுமில்லை. அங்கே நான் நின்றிருந்தேன். இதோ அதுவும் வருகிறது. ஏதோவொன்று சம்ப வித்தது. நான் விரும்பினேன் நான்... எல்லா நேரங்களிலும் அது சம்பவிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அது - அது - அது அதை செய்யாது; ஆனால் நான் ஒரு அதிபயங்கரமான வியாதியின் பிரச்சனையை பார்க்கும் போது ஏதோவொன்று சம்பவிக்கிறது; அது மனிதனல்ல. தேவனால் மனிதனை தொடர்புக் கொள்ளும் போது அது சம்பவிக்கிறது. அது பிரதிஷ்டை பண்ணப்பட்டு இருக்கும் போதே அது சம்பவிக்கிறது. 45. தரிசனம் நிகழும்போது மேடையை கவனியுங்கள். பொல்லாத ஆவிகள் வெளியேறும் போது கவனியுங்கள்... என்ன நிகழ்கிறது என்பதை கவனியுங்கள். அது ஒரு பரிசுத்த ஆவியின் ஒப்படைப்பு ... பரிசுத்த ஆவிக்கு. அவர் உள்ளே வந்து கட்டுபாட்டை எடுத்துக் கொள்கிறார். அவர் எப்படியாய் அதை கட்டுப்படுத்துகிறார் என்பதை கவனியுங்கள். அது எவ்வாறு நிகழ்கிறது என்பதை கவனியுங்கள். அது தேவன்; அது மனிதனல்ல. நாம் மட்டும் அதில் ஜீவிப்போமென்றால்... தேவனே, நாங்கள் அங்கே ஜீவிக்கட்டும். என்னிடமிருந்து சுமார் இருபது கெஜம் தூரத்தில் அந்த காளை நின்றிருந்தது, எழுந்து என்னிடம் அது வந்தது, பெரிய நீளமான கொம்புகள். [ஒலிநாடாவில் காலியிடம் ஆசி] "இதுதான் முடிவு". அந்த காளையை வெறுப்பதற்கு பதிலாக; அது விச்சித்திரமாயிருந்தது; நான் அம்மிருகத்தை நேசித்தேன்: அதை விளக்க எனக்கும் ஆசைதான். ஆனால் சகோதரனே, நான் உன்னிடம் ஒன்றை கூறட்டும். இந்த ஜீவியத்தில் அன்பை காட்டிலும் ஒரு மகத்தான ஆற்றலோடு உன்னால் ஒருபோதும் தொடர்பில் வர முடியாது. ஆம், ஐயா. நான் பிசாசுகளை உதைத்து ஜெயம்கொள்ள முயற்சிப்பதில்லை. நான் தேவனை நேசிக்கிறேன். பாருங்கள், அன்பு என்பது தேவனாயிருக்கிறது. தேவன் அன்பாயிருக்கிறார். அன்பு தேவனை அசைக்கிறது. "தேவன் இவ்வ ளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்..." அது அன்பாயிருக்கிறது. அன்புதான் ஜெயம் கொள்கிறது. மேலும் இந்த பெரிய மிருகம் என்னை நோக்கி வர ஆரம்பித்த போது, இன்னும் கொஞ்ச நேரத்தில் அது மரணமாயிருக்கும் என்று நான் அறிந்திருந்தேன், ஏதோவொன்று சம்பவித்தது. அங்கே ஏதோவொன்று எனக்கு சம்பவித்தது, நான் அம்மிருகத்தை நேசித்தேன். நான் நினைத்தேன், "பரிதாபமான மிருகம், அது தூங்கி கொண்டிருந்தது. நான் அதினுடைய இடத்தில் இருக்கிறேன். நான் இங்கே இருந்திருக்க கூடாது. அது தன்னால் முடிந்த அளவுக்கு வேகமாக என்னை நோக்கி வந்தது, நான் கூறினேன், "பார் மிருகமே, நீ தேவனுடைய சிருஷ்டிக்கப்பட்ட உயிரினம்; நான் தேவனுடைய ஊழியக்காரன். இங்கே இருக்கும் தேவனுடைய ஒரு ஊழியக்காரனுக்கு ஜெபிப்பதற்காக நான் என்னுடைய வழியிலே சென்று கொண்டிருக்கிறேன் நான் என்னுடைய கர்த்தரின் சேவையில் இருக்கிறேன். என்னை மன்னிக்கவும் நான் உன்னை தொந்தரவு செய்துவிட்டேன். இப்பொழுது, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தால் நீ பின்னே சென்று படுத்துக் கொள். நான் உன்னை தொல்லை செய்யமாட்டேன்". அது தன்னால் முடிந்த அளவிற்கு வேகமாக வந்து கொண்டே இருந்தது. தன் மடியில் வேதாகமத்தை வைத்து இங்கே என் அருகில் அமர்ந்திருக்கும் என் அன்பான சகோதரனுக்கு நான் பயப்படாததை காட்டிலும் அந்த காளைக்கு நான் கொஞ்சங்கூட பயப்படவில்லை. அவ்வளவுதான். 46. நீங்கள் பயந்திருக்கிறீர்கள். இன்றைக்கு ஜனங்கள் பயந்திருக் கின்றனர். எதற்காக நீங்கள் பயப்படுகிறீர்கள்? ஏன், மரணத்தாலும் கூட ஒரு கிறிஸ்தவனை பயமுறுத்த முடியாது. "மரணமே, உன் கூர் எங்கே?" ஜனங்களின் உள்ளான யோசனைகள் பயந்ததாயிருக்கிறது. 'ஒ, சகோதரன் பிரன்ஹாம், மருத்துவர் என்னிடம் நான் சுகமாக முடியாது என்று கூறியுள்ளார்". எதற்காக நீ பயப்படுகிறாய்? உனக்காக பாவ நிவிர்த்தியானது அங்கே கிடத்தப்பட்டிருக்கிறது. நிச்சயாமாக. "நல்லது சகோதரன் பிரன்ஹாமே, நான் மிக அதிகமாக பாவம் செய்து விட்டேன். நான்... "எதற்காக நீ பயப்படுகிறாய்? உனக்காக ஒரு பாவநிவிர்த்தி காத்துக் கொண்டிருக்கிறது. உன்னை நேசிக்கும் ஒருவர் இருக்கிறார். பயப்படாதே. இயேசுவின் மாறாத வார்த்தைகள், "பயப்படாதே. நான் மரித்தேன். ஆனாலும் இதோ உயிரோடிருக்கிறேன், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன். பயப்படாதே." அந்த சூழலை உங்களை சுற்றி பெற்றிருங்கள். அந்த சூழலை பெற்று கொள்ளுங்கள். "இப்பொழுது, அவன் மெத்தோடிஸ்டு. அவன் ஒருத்துவத்தை சார்ந்தவன். அவன் திரித்துவக்காரன்.அவன் இது அல்லது அது. அதை உங்கள் மனதிலிருந்து வெளியே எடுத்துப்போடுங்கள். "நான் அவனை நேசிக்கிறேன். அவன் என் சகோதரன்." "அவள் ஒரு கத்தோலிக். அவள் ஒரு ப்ரோடஸ்டன்ட் அவள் ஒரு..." அதை உங்கள் மனதிலிருந்து வெளியே எடுத்து போடுங்கள். உங்களை சுற்றி சூழலை பெற்றுக்கொள்ளுங்கள். வெளியே இந்த மற்ற பிரகாரத்தில் நின்றுகொண்டு உங்களால் அதை ஒரு போதும் செய்யவே முடியாது. முதலாவதாக நீங்கள் கிறிஸ்துவுக்குள் வந்து, அவருடைய பிரசன்னத்தில் ஜீவிக்கவேண்டும். வேதாகமம் அதை கூறியுள்ளது, "ஜெயம்கொள்ளுகிறவன் எவனோ, அவனுக்கு நான் ஒரு புதிய நாமத்தை கொடுப்பேன். என்னுடைய ஆவியை அவனுக்குள் வைப்பேன்." கவனியுங்கள், முதலாவதாக, அங்கே ஜெயம்கொள்ள வேண்டியிருக்கிறது. கிறிஸ்துவுக்குள் நீங்கள் இருப்பதற்கு இந்த காரியங்களை நீங்கள் ஜெயம் கொள்ள வேண்டியிருக்கிறது. 47. அந்த ஒரு இடத்தில்தான் சபை தோல்வியடைகிறது. ஜெயம் கொள்வதில், கோபம் - கோபத்தை ஜெயம் கொள்வதில், மாறுபா டுகளை ஜெயம் கொள்வதில், சபை பாரபட்சங்களை (prejudice) ஜெயம்கொள்வதில், வெறுப்பை ஜெயம்கொள்வதில். இன்றிரவு கூச்சலிட்டு அந்நிய பாஷையில் பேசி சபை இருக்கைகளின் நடுவே இருக்கும் வழியில் இங்கும் அங்கும் ஓடும் பல ஜனங்கள், தங்கள் அண்டை வீட்டுக்காரரை வெறுக்கிறார்கள். அதற்கு... சகோதரனே, இன்னமுமாக நீ இழக்கப்பட்டே இருக்கிறாய். அது கூறுவதற்கு கடினம்தான், ஆனால் அது தான் உண்மை. சரி. ஜெய ம்கொள். உன்னால் எப்பொழுது ஜெயம்கொள்ள முடியுமென் றால்... நீங்கள் கூறலாம், "நான் மன்னாவை புசிக்கிறேன், தேவனுக்கு மகிமை" என்று. ஆம், ஆனால் ஒரு நாளில் இருந்து மற்றொரு நாளில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். உங்களுக்கு உணவை தவறவிடும் அசௌகரியங்கள் நிகழ்கிறது. மன்னா எப்பொழுதுமே புதிதாகவே இருக்கும் இடத்திற்குள் வாருங்கள். உங்களு டைய அண்டை வீட்டுக்காரர் உங்களை சரியாக நடத்தினாலும் அல்லது நடத்தாவிட்டாலும், எப்படியிருந்தாலும் நீங்கள் அவர் களை நேசியுங்கள். அது சரி. அவன் உங்களோடு ஒத்து போனாலும் அல்லது போகாவிட்டாலும், எப்படியிருந்தாலும் அவனை நீங்கள் நேசியுங்கள். அந்த விதமாகத்தான் நீங்கள் செய்ய வேண்டும். அதுதான் மறைவான ஜீவியம். அதுதான் அந்த பிரதிஷ்டைப் பண்ணப்பட்ட ஜீவியம். அந்த ஜீவியத்தில் தான் உலகத்தின் திரைகள்... உலக காரியங்களில் இருந்து நீங்கள் துண்டிக்க பட்டிருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவில் மட்டும் ஜீவிக்கிறீர்கள். சபையே, நான் உணர்த்துவதை உன்னால் காண முடிகிறதா? உங்களுடைய உணர்வுகளை நான் காயப்படுத்த விரும்பவில்லை; ஆனால் உங்களோடு கூட ஒருநாளில் நான் நியாயத்தீர்ப்பில் நிற்க வேண்டும். உண்மையென்று அறிந்திருந்தும், அதை கூறாமலிருந்தால் அதற்கு நான் பொறுப்பாளியாய் இருக்கிறேன். அது சரி. 48. ஒ, எல்லாவித கூச்சலிடுவதையும் நான் விசுவாசிக்கிறேன்; அந்நிய பாஷை பேசுவதை நான் விசுவாசிக்கிறேன், மேலும் இந்த காரியங்களை நான் விசுவாசிக்கிறேன். ஆனால், சகோதரனே, அது அதோடு மட்டும் முடிவதில்லை. இல்லை, அது அதுவல்ல. அது வெறும் அதனுடைய தன்மைகளில் ஒன்று. அது சரி. அசலானதை முதலாவது பெற்றிருங்கள். அது இந்த மற்றவைகளை உற்பத்தி செய்யும். "அந்நாளில் அநேகர் என்னிடத்தில் வந்து, 'கர்த்தாவே, நான் இதை செய்யவில்லையா, பிசாசுகளை துரத்தவில்லையா, உம்முடைய நாமத்தால் இவை எல்லாவற்றையும் செய்யவில்லையா?' என்பார்கள். அவர் கூறுவார், 'அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள், நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை" என்பார். பாருங்கள்? ஜாக்கிரதையாயிருங்கள். கவனியுங்கள், மேலும் இந்த காளையானது, என்னை நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தது, நான் அங்கே நின்றிருந்தேன்... நான் கூறினேன், "இப்பொழுது நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன், நீ போய் படுத்துக்கொள்" என்றேன். என்னிடமிருந்து ஐந்து அடி தூரம் வரை அது ஓடி வந்து, நின்றது, ஆற்றலை இழந்தது போன்றிருந்தது. அது இப்படியும் அப்படியும் பார்த்து, திரும்பி நடந்து சென்று படுத்துக் கொண்டது. மேலும் அந்த காளை இருந்த இடத்திலிருந்து சரியாக பத்தடி தூரத்திற்குள் நான் நடந்து அவ்வயலை கடந்தேன், மீண்டும் அது நகரவே இல்லை. நான் கடந்து சென்றேன். நான் வயலை கடந்த பிறகு, அங்கே நின்று, என் சுயநினைவிற்கு வந்தேன். நான் சிந்தித்தேன், "என்ன நடந்தது?" அப்பொழுது நான் அழ ஆரம்பித்து, என் கரங்களை உயர்த்தி தேவனை ஸ்தோத்தரித்தேன். 49. கடந்த கோடை காலத்தின் போது நான் என்னுடைய முற்றத்தில் புற்களை கத்தரித்துக் கொண்டிருந்தேன். நான் கத்தரிக்கும் இயந்திரத்தை உபயோகபடுத்திக் கொண்டிருந்தேன். ஜெபம் செய்துக் கொள்வதற்காக ஜனங்கள் உள்ளே வருவார்கள். நான் அங்கே சென்று, என்னுடைய ஒவரால்ஸ்சை (overalls- சட்டை மற்றும் பேண்ட் ஒன்றாக தைக்கப்பட்டிருக்கும் ஒருவிதமான ஆடை - ஆசி) அணிந்து, முற்றத்தின் புற்களை கொஞ்சம் கத்தரிப்பேன், உங்களுக்கு தெரிய வேண்டிய முதல் காரியம் யாரோவொருவர் உள்ளே வந்தார். நான் பின்பக்கமாக ஓடி என்னுடைய ஆடைகளை மாற்றிக்கொண்டு, உள்ளே வந்து, சில வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கவேண்டும். சில மணி நேரத்திற்கு பின்னர் வெளியே சென்று, ஆரம்பிக்க வேண்டும், அப்பொழுது ஒரு வேளை, ஒரு நாளில் இரண்டு முறை சுற்றி வருவேன். பின்பக்க முற்றத்திற்கு நான் செல்லும் நேரத்திற்குள், முன்பக்க முற்றம் மறுபடியும் வளர்ந்து விடும். எனக்கு அப்படியொரு நேரம் உண்டாயிருந்தது, ஜனங்கள் வந்துக்கொண்டிருந்தார்கள். நான் மறந்துவிட்டேன்... பெரிய கூட்டை கட்டும் மலைக் குளவியை பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? அவைகளில் ஒரு கூட்டம் ஒரு கூட்டை அங்கே வேலியின் ஓரத்தில் கட்டியிருந்தது, ஒரு சிறிய புதர்போன்ற ஒன்றில். இந்த கத்தரிக்கும் இயந்திரத்தை நான் அங்கே உபயோகபடுத்திக் கொண்டிருந்தேன்... பின்புறத்தில், யாரும் என்னை பார்க்கவில்லை, நான் என்னுடைய சட்டையை கழற்றி இருந்தேன். நான் சற்றே கத்தரித்துக் கொண்டே வந்து, இந்த வேலியை இடித்தேன். திடீரென்று, அந்த மலைக்குளவிகள் அங்கே இருப்பதை நான் மறந்து விட்டேன், சிறிது நிமிடங்களுக்குள் அந்த மலைக்குளவிகளால் நான் முழுவதுமாக மூடப்பட்டேன், அந்த பெரிய குளவிகளால்: மேலே சட்டை எதுவுமில்லாமல். 50. நல்லது, முதலில் அது - அது என்னை பயமுறுத்தியது, ஆனால் அப்பொழுது அது மறுபடியும் சம்பவித்தது. ஏதோவொன்று... நான் நினைத்தேன், "பரிதாபத்திற்குரிய சிறிய உயிரினமே, அங்கே கூட்டில் இருந்தாய், இங்கே நான்..." அவை என்னை தொந்தரவு செய்யவில்லை; நான்தான் அவைகளை தொந்தரவு செய்தேன். அது என்னவென்று அறிந்துகொள்ள எனக்கும் விருப்பம்தான், ஆனால் அது சம்பவிக்கும் ஏதோவொன்றாயிருக்கிறது. நான் நினைத்தேன், "பாரிதாபமான சிறிய உயிரினங்களே". இதைதான் நான் கூறினேன். நான் கூறினேன், "இப்பொழுது, தேவனுடைய சிறிய உயிரினங்களே, தேவன் உங்களை சிருஷ்டித்தார். நான் தேவனுடைய ஊழியக்காரன். இந்த முற்றத்தை நான் சீக்கிரமாக முடிக்க வேண்டும்". அவைகள் சுற்றி ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன, நான் அவைகளுக்கு பயப்படவில்லை. அவைகள் கூறியது... நான் கூறினேன், "இப்பொழுது, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நீங்கள் உங்களுடைய கூட்டிற்கு திரும்பி செல்லுங்கள், 'ஏனெனில் நான் சீக்கிரமாக இந்த முற்றத்தை கத்தரிக்க வேண்டும். இனிமேல் உங்களை நான் தொந்தரவு செய்ய மாட்டேன், 'ஏனெனில் தேவனுடைய ஊழியக்காரர்கள் ஜெபித்துக்கொள்வதற்காக காத்திருக்கின்றனர்." என்றேன். மேலும் சகோதரனே... மேலும் உங்களை நான் நியாயத்தீர்ப்பில் சந்திப்பேன். அவைகள் கொஞ்ச நேரம் என்னை சுற்றியது, மேலும் ஒன்று முதலில் சென்றதும், அக்கூட்டம் முழுவதும் சரியாக திரும்பி கூட்டிற்குள் சென்று அமைதியாயின. சூழல், தேவனே... அது சரி. அதைபற்றி எதோவொன்றிருக்கிறது. 51. பயம் என்பது கோரமானதாயிருக்கிறது. நீங்கள் ஒரு நாயை கவனித்ததுண்டா? நான் வசிக்கும் வீட்டில் ஒரு பெரிய ஷெப்பர்ட் (shepherd - நாய் இனம் - ஆசி) இருந்தது. இன்றைக்கு நான் முற்றத்தில் நடந்தபோது; அந்த பெரிய ஷெப்பர்ட் எல்லாரையும் கடந்து வந்தது, 'ஏனெனில் நான் அவைகளை நேசிக்கிறேன். ஜெர்மானியிலுள்ள குக்கன்புல்லில் (Guggenbuhl), நான் சந்தித்த மாத்திரத்தில்... அந்த சிறிய நாய்கள் வேறு யாரிடமும் செல்லவே ஒருவகை நாய் இல்லை. அந்த சிறிய டாச்ஹன்ட் (Dachshund இனம் - ஆசி] வந்து என்மீது ஏறியது. நான் அவைகளை நேசிக்கிறேன். அவைகளுக்கு அது தெரியும். நீங்கள் உண்மையாகவே உங்களுடைய இருதயத்தில் ஜனங் களை நேசித்தால், அவர்கள் அதை அறிவர். நீங்கள் ஜனங்களை ஏமாற்ற முடியாது. அவர்கள் அவ்வளவு முட்டாள் கிடையாது. நீங்கள் நேசிப்பது போன்று உங்களால் பாவனை செய்ய முடியும்; நீங்கள் வெறுமனே நடிக்கிறீர்கள் என்று அவர்களால் கூறிட முடியும். மேலும் நீங்கள் எப்பொழுது பாவனை செய்கிறீர்கள் என்று சாத்தானால் கூறமுடியும், ஆனால் உண்மையாயிருக்கும்போதும் அதை அவன் அறிவான். அதற்கான ஒரே வழி... நீங்கள் ஒரு வேளை அதை போலியாக செய்யலாம்; பலவற்றை அது போன்றிருக்க உங்களால் ஒருவேளை செய்யமுடியும், ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்குள் வரும்வரை அந்த வேலையை உங்களால் செய்து முடிக்க முடியாது. அது சரி. பரிபூரணமாக, அற்பணிக்கப்பட்டு, தேவ அன்போடு, மிச்சமில்லாமல் முழுவதுமாக, கிறிஸ்துவிடம் வாருங்கள். அவ்வளவுதான், நண்பர்களே. உண்மை. 52. பாருங்கள், அது புதுப்பிக்கபட்டது. நீங்கள் எப்பொழுதாவது ஒரு காலைவேளையில் வெளியே சென்றிருக்கிறீர்களா, நான் கூறியவாறு, அந்த புத்துணர்ச்சியான உணர்வு, பனி பெய்திருக்கும் போது? கவனியுங்கள், நீங்கள் எப்பொழுதாவது ரோஜா தோட்ட த்திற்கு சென்றிருக்கிறீர்களா? இப்பொழுது, அது அந்த கோல் பூக்களையும் வெளியே கொடுத்தது, அந்த நறுமணம், அதிகாலை யில் அந்த மலரின் வாசனை, ஏன்? எல்லாமுமே அமைதியாக இருக்கிறது. மேலும் பூமிக்குள் செல்லும் ஒவ்வொரு வித்தையும், பனிதான் அதை மறுபடியும் ஜீவிக்க செய்கிறது. அது அந்த மண்ணை புதுப்பிக்கிறது. நீங்கள் தேவனுடைய வித்தை எடுத்து, அதை ஒரு பாரபட்சம் பார்க்காத, மாறுபாடில்லாத, சற்றே ஒரு மென்மையான, தாழ்மையான இருதயத்தில், ஒரு உண்மையான நன்கு வளைந்து கொடுக்கும் இருதயத்தினுள் போடுங்கள். தேவனுடைய வித்தை அதிலே போட்டு, அதை வளர விடுங்கள். அது தனக்கு தானே தனிமையில் இருக்கட்டும், அந்த மகிமையின் பனித்துளிகள் அந்த ஆத்துமா மீது பொழியும் போது, இதுவரை நீங்கள் பார்த்திராத இனிமையான, சாந்தமான, தாழ்மையான கிறிஸ்தவனை உங்கள் அண்டை வீட்டில் பார்ப்பீர்கள். அது சரி. அதுதான் நமக்கு தேவை. அதுதான்... அதுதான் உலகத்திற்கும் தேவை. என் கிறிஸ்தவ நண்பனே., அது சரி. கவனியுங்கள், அங்கேயும் வெளிச்சம் இருந்தது. இப்பொழுது, வெளியே வெளிப்பிரகாரங்களில், அங்கே சபையார், வழக்கமான சபையார் இருந்தார்கள், அவர்களுக்கு நட்சத்திரங்களும், நிலாவும் இருந்தன. நான் துரிதப்படுத்த வேண்டும், ஆனால் இந்த கடைசியான குறிப்பை கவனியுங்கள். இப்பொழுது, நான் சரியாக உங்களோடு நேரடியாக பேச விரும்புகிறேன். 53. அங்கே வெளியிலே, அவர்களுக்கு என்ன வெளிச்சமிருந்தது? இரவு நேரங்களில் அவர்களுக்கு நட்சத்திர வெளிச்சமிருந்தது, நிலாவின் வெளிச்சமிருந்தது. அவர்களுக்கு சூரியனின் வெளிச்சமிருந்தது. எவ்விதமான மேகமும் வந்து அவை எல்லாவற்றையும் நிலைகுலைய செய்ய முடியும். எப்படி நடப்பது என்று அவர்களால் பார்க்க முடியாது. இரவில், சில நேரங்களில் மேகங்கள் நிலாவையும் நட்சத்திரங்களையும் மறைத்துவிடும். பகலில், நாள் கணக்கில், வார கணக்கில் சூரியன் பிரகாசிக்காது. அவ்விதமாகத் தான் அனுபவங்களும் அங்கே இருக்கின்றன. அது சரி. சிறிய பிரச்சனை வரட்டும், நீங்கள் பின்வாங்கிவிடுகிறீர்கள், நீங்கள் இங்கிருந்து சென்று விடுகிறீர்கள், ஒரு சபையிலிருந்து இன்னொன்றிற்கு, உங்களுடைய அங்கத்தினன் அட்டையை ஓரி டத்திலிருந்து இன்னொன்றிற்கு கொண்டு செல்கிறீர்கள். "இனி மேல் நான் பாப்டிஸ்டிற்கு செல்லவே மாட்டேன், ஏனென்றால் நான் உன்னிடம் கூறுகிறேன்; அது எனக்கு பிடிக்கவில்லை." மெதோடிஸ்டு உங்களை தவறாக நடத்துகிறது, நீங்கள் பெந் தெகொஸ்தேவிற்கு ஓடிவிடுகிறீர்கள், பின்பு அங்கிருந்து நாசரேனுக்கு [ஸ்தாபனத்தின் பெயர்- ஆசி]. பாருங்கள்? நீங்கள் வெளிப் பிரகாரங்களில் ஜீவிக்கிறீர்கள். ஏதேனும் ஒரு சிறிய ஒன்றுகூட, பழைய உலக வெளிச்சம் உங்களை அணைத்து விடும். நல்லது, அப்பொழுது நீங்கள் வந்து, கூறலாம். "இல்லை, சகோதரன் பிரான்ஹாமே, அதிலிருந்து நான் வெகு தூரமாக வந்து விட்டேன். நான் கர்த்தரை ருசிபார்த்திருக்கிறேன். அவர் நல்லவர் என்பதை நான் அறிவேன். "அது நல்லது தான். எல்லாம் சரிதான், அப்படியானால் நீங்கள் இந்த முதல் பலிபீடத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கிறீர்கள். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், அவர்களுக்கும் வெளிச்சமிருந்தது. ஆனால் அது செயற்கையானது. வெளிச்சத்தை பிரகாசிக்க ஏழு முனை கொண்ட விளக்கு அவர்களுக்கிருந்தது. அந்த வெளிச்சம் சில நேரங்களில் மங்கி எரிந்தது. சில நேரங்களில் அது புகைந்தது. வெளிச்சம் என்றால் என்னவென்பதை நீங்கள் அறிவீர்கள்; சில நேரங்களில் அது இல்லாமலே போய்விட்டது. 54. அந்த விதமான வெளிச்சம் அப்படிதான் இருக்கிறது. நீங்கள் வெறுமனே இங்கே மாத்திரம் ஜீவித்து, கூறலாம், "நல்லது, நான்- நான் விசுவாசிக்கிறேன் எல்லாம் சரிதான், ஆனால் இதோடு கூட என்னால் முழுவதுமாக செல்ல முடியவில்லை, நான் இதையும் மற்றும் அதையும் விசுவாசிக்கவில்லை. நான் மிக அதிகமாக விசுவாசிக்கிறேன், ஆனால் என் சபை அதை எனக்கு போதிக்கவில்லையென்றால், நல்லது, என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை." பாருங்கள், நீங்கள் புகைந்து விட்டீர்கள். ஒரு மிக மிகச் சிறய காரியம் வரும்போது, உங்களுடைய விளக்கின் புகை செல்லும் குழாய் புகைந்து விடுகிறது, மேலும் உங்களுக்கு தெரியவேண்டிய முதல் காரியம், வெளிச்சம் அணைந்து விடுகிறது. ஆனால் உள்ளே பாருங்கள். ஒ, சகோதரனே, ஒரு முறை அங்கே உள்ளே சென்ற அந்த மனிதன் ... எதற்காக அவன் உள்ளே வந்தான்... அவன்... ஒவ்வொரு பூமிக்குரிய வெளிச்சமும், ஒவ்வொரு செயற்கை வெளிச்சமும் அவனிடமிருந்து துண்டிக்கப் படுகிறது. அவனுக்கிருந்த ஒரே ஒரு வெளிச்சம்... அந்த கேருபீன்களின் செட்டைகளின் கீழ், அந்த ஷெக்கினா வெளிச்சமிருந்தது, ஒரு போதுமே அணைந்துப் போகாத ஒரு உண்மையான மென்மையான பரிசுத்த வெளிச்சம். சூரியன் என்ன செய்தது, குத்து விளக்கு என்ன செய்தது, மற்றது என்ன செய்தது என்பதை பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை; அந்த பிரசன்னத்தில் ஜீவித்தவன் இரவும் பகலும் வெளிச்சத்திலே நடக்கிறான். 55. அங்கு தான் நாம் இருக்க வேண்டும். உங்களுடைய அனுபவம் என்னவாயிருந்தாலும் அது பொருட்டே அல்ல... அது மனவலி யாயிருக்கலாம், அது தொல்லைகளாயிருக்கலாம், அது மனம் உடைந்து போகுதலாயிருக்கலாம், அது இதுவாக, அதுவாக, அல்லது மற்றதாக இருக்கலாம். இன்னமுமாக நீங்கள் தேவனுடைய வெளிச்சத்திலே நடந்துக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் ஷெக்கினா மகிமையில் ஜீவித்துக் கொண்டு இருக்கிறீர்கள், இயேசு தன்னுடைய பிரசன்னத்தில் இருக்கும் அவ்விடத்தில் ஜீவிக்கிறீர்கள், அது "தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாகவே நடக்கிறது." நீங்கள் அவரை நேசிப்பீர்கள், மேலும் நீங்கள் அந்த கனிவான, மென்மையான, இனிமையான, தாழ்மையான கிறிஸ்தவ ஜீவியத்தில் நடக்கிறீர்கள். அவ்விதமாக நீங்கள் நடைபோட விரும்ப மாட்டீர்களா? அங்கே ஜீவிக்க கூடாது என்று விரும்பும் ஜனங்கள் இங்கே யாருமே இல்லை. நண்பர்களே, அங்குதான் நீங்கள் ஜீவிக்க வேண்டும். இதைப் பற்றின இரகசியத்தை நீங்கள் அறிய விரும்பினால், ஜீவியத்தை பற்றி, ஏன் இந்த காரியங்கள் என்பதை பற்றி நீங்கள் அறிய விரும்பினால்... ஒரு நாள் தேவனுடைய கிருபையால், அவர் என்னை உள்ளே கூட்டிச் சென்றார். அது சரி. அதுதான் அதை செய்கிறது. உங்களிடம் அதைப் பற்றி ஒன்றுமே இல்லை. இனி ஒருபோதும் நீங்கள் உங்களுக்காக ஜீவிக்க மாட்டீர்கள். நீங்கள் மற்றவர்களுக்காக ஜீவிப்பீர்கள். 56. இன்றைக்கு அவர்கள் கைமாற்றி கொண்டிருந்த ஒரு சிறிய படத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தேன், என்னுடைய படம் அது. நான் அதை பார்த்து, நான் நினைத்தேன், "என்னே". என்னு டைய மனைவியை நான் பார்த்து நான் எண்ணினேன்; நான் கூறினேன், "என்னே, தேனே, இதை பார். நான் உண்மையாகவே ஒரு வயதான மனிதனாயிருக்கிறேன், நான் வயதானவன்தானே?" நான் கூறினேன்... சில வருடங்களுக்கு முன்பு எனக்கு நினைவிருக்கிறது... ஏன், அதிக நாட்கள் ஆகாதது போன்றிருக்கிறது, நான் ஒரு பையன் போன்றிருந்தேன். எனக்கு நினைவிருக்கிறது நான் நின்று அடர்த் தியான கருப்பு முடியை வாரியதை. சிறிது நாட்களுக்கு முன்பு என் மனைவி என்னிடம் கூறினாள்; அவள் கூறினாள், "பில்லி, உங்களுக்கு வழுக்கை விழுகிறது, தேனே" என்றாள். நான் கூறினேன், "ஆனால், தேனே, உனக்கு என்னவென்று தெரியுமா? அவைகளில் ஒன்றை கூட நான் இழக்கவில்லை." அவள், "நீங்கள் இழக்கவில்லையா?" என்றாள் நான் "இல்லை" என்றேன். அவள், "அவை எங்கே" என்றாள். நான் கூறினேன், "உன்னிடம் ஒன்றை நான் கேட்க வேண்டும். எனக்கு அவை கிடைப்பதற்கு முன்பு அவை எங்கே இருந்தது? அப்பொழுது அவை எல்லா விடங்களிலும் இருந்தன, இப்பொழுது அங்கேயே இருக்கிறது, எனக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. என்றோ ஒரு மகிமையான நாளில் என் கர்த்தர் வருவார், மேலும் ஒவ்வொன்றுமே... நான் திரும்ப செல்வேன்.'' நான் ஜீவிக்கிறேன். "நான் அந்த கிழிக்கப்பட்ட திரையை தாண்டி விட்டேன், அங்கே மகிமைகள் ஒருபோதும் ஒழியாது. நாம் இராஜாவின் பிரசன்னத்தில் ஜீவிக்கிறோம். அல்லேலூயா. பரிசுத்தமாக்கப் பட்டவனாய் நான் பலிபீடத்தில் இருக்கிறேன். ஒ. அவருடைய நாமத்திற்கு மகிமை. நான் அந்த கிழிக்கப்பட்ட திரையை தாண்டி விட்டேன், அங்கே மகிமைகள் ஒரு போதும் ஒழியாது, ஏனெனில் நாம் இராஜாவின் பிரசன்னத்தில் ஜீவிக்கி றோம்." 57. என்றோ ஒரு மகிமையின் நாளில்... என்னுடைய இந்த வயதான சிறிய சரீரம், அது உருகிப் போய்க்கொண்டிருக்கிறது. நரைத்த தலையுடைய தாய்மார்களும் தந்தைமார்களுமே, சில வருடங்களுக்கு முன்னர் நீங்கள் அவளோடு பீடத்தண்டை நடந்து வந்தீர்கள், ஒரு சிறிய இனிய இருதயத்தோடு, ஒரு அழகிய பெண்ணோடு. ஆனால் இயற்கை... அது எப்படியாக கடந்து போகிறது என்பதை நீங்கள் காண்கிறீர்கள். ஆனால் இந்த மகிமையின் நாட்களில் ஒன்றில் இயேசு தேவனுடைய பிரசன்னதிலிருந்து வருவார், நம்முடைய சிறந்த வயதிலிருந்த ஒவ்வொன்றுமே, மறுபடியும் திரும்பும், மேலும் நாம் அவரோடு என்றென்றும் ஜீவிப்போம். அல்லேலுயா. இந்த சரீரங்கள் எதினால் செய்யப்பட்டது? கொஞ்சம் சிறிய காஸ்மிக் கதிர்களாலும், ஒரு சில அணுக்களாலும், பெட்ரோலியத்தாலும், மற்றவைகளாலும், ஒன்று சேர்த்து, தேவன் அதை பூமி யின் மண்ணிலிருந்து கொண்டுவந்து, ஒரு ஓவியத்தை வரைந்தார். இப்பொழுது நாம் நகலில் மட்டுமே ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். என்றோ ஒரு மகிமையின் நாளில் மரணமானது அந்த படத்தை அசலுக்கு கொண்டு வரும், மேலும் நாம் மகிமைப்படுத்தப்பட்ட சரீரத்தில் மறுபடியுமாக திரும்புவோம், ஒருபோதும் வயதே ஆகாமல் இருப்பதற்கு, ஒருபோதும் வியாதிப்படாமலே இருப்பதற்கு, ஒருபோதும் இருதயவலியே இல்லாதிருப்பதற்கு. சகோதரனே, பிரகார திரைக்குள் சென்று, உன்னை சுற்றி இருக்கும் உலகத்தை துண்டித்து, உன்னையே கிறிஸ்துவுக்கு பிரதிஷ் டைபண்ணி, ஒரு அர்பணிக்கப்பட்ட ஜீவியம் செய்வது உனக்கு தேவையாயிருக்கிறது, நீ அதை விசுவாசிக்கவில்லையா? நிச்சயமாக, தேவையாயிருக்கிறது. ஒ. அந்த ஜீவியத்தைதான் ஜீவிக்க வேண்டும். இங்கே இருப்ப தில் எத்தனை பேர் கூறுகிறீர்கள், "சகோதரன் பிரன்ஹாமே, தேவ னுடைய கிருபையால் அதுபோன்ற ஒரு ஜீவியத்தை நான் ஜீவிக்க விரும்புகிறேன்" என்று?. உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். "அவ்விதமான ஜீவியத்தை நான் ஜீவிக்க விரும்புகிறேன்." தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது நமக்கு தேவையென்று நான் விசுவாசிக்கிறேன், நீங்கள் விசுவாசிக்கவில்லையா? 58. நாம் ஜெபிக்கலாம், எங்கள் பரலோக பிதாவே, நாளானது நெருங்கி வருவதை நாங்கள் பார்க்கையில், அந்த ஜீவியத்தை பற்றி நாங்கள் அறிந்திருக்கிறோம், அக்கயிறுகள் எல்லாம் எளிதில் அறுந்து போகக் கூடியதாயிருக்கிறது. அவற்றில் தான் நாங்கள் நடந்து கொண்டிருக்கிறோம். எங்களில் பலர் சூரிய அஸ்தமனத்தை பார்க்க மலையின் உச்சிக்கு வந்து விட்டோம். புருவங்களெல்லாம் உறைகிறது. இன்றிரவு இந்த ஜனக்கூட்டத்தை பாரும் பல நரைத்த தலையுடைய சகோதரனும் சகோதரியும், இன்னும் கொஞ்ச நாளில் நாம் கடந்து செல்வோம் என்பதை அறிந்தவர்களாய் இங்கே அமர்ந்திருக்கின்றனர். இங்கே வாலிப ஜனங்களும் அமர்ந்திருக்கின்றனர், கர்த்தாவே, அவர்களுக்கு முன்பு செல்வோம். பின்பு, கர்த்தாவே, இந்த விரைந்தோடுகிற நேரம் எல்லாம் மாறிவிடும். அப்பொழுது அது நித்தியமாயிருக்கும், மேலும் நாங்கள் இந்த ஜீவியத்தை பற்றினதான கணக்கை ஒப்புவிக்க அவருடைய பிரசன்னத்தில் நிற்க வேண்டும். ஒ யேசுவே, இந்த சரீரங்களை எங்களுக்கு நீர் அளித்தீர். நீர் அவைகளை பரிசுத்தப்படுத்தினீர். உமக்காக அதை வைத்திருக்கிறோம். ஆனால், கர்த்தாவே, இன்றிரவு இங்கிருக்கும் ஒவ்வொரு நபரையும் நீர் அந்த திரைக்குள்ளாக, வேறுபாடுகளிலிருந்து விலக்கி, பலதரப்பட்ட சபை பாரம்பரியங்களை (churchanities), ஸ்தாபனங்களை, தாழ்வான காரியங்களை கடந்து கூட்டிச் செல்லும்படி நான் ஜெபிக்கிறேன். பிதாவே, அவர்கள் உம்முடைய மகிமையான பிரசன்னத்திற்குள் வந்து, கர்த்தராகிய இயேசுவின் தெய்வீக வெளிச்சத்தில் ஜீவிக்கட்டும். அதை அருளும், கர்த்தாவே. இங்கே இருக்கும் ஒவ்வொரு ஆத்துமாவும் தேவனுக்கென்று பிரதிஷ்டை பண்ணப்படட்டும், இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். 59. நான் ஆவல் கொள்கிறேன், இப்பொழுது நம்முடைய தலைகள் தாழ்த்தியிருக்கையில், இப்பொழுது இந்த பீடத்தண்டை யாரேனும் வந்து, பியானோ (organ) வாசிக்கையில், இன்றிரவு என் னோடு கூட இந்த மரத்தூளில் (sawdust - தரை - ஆசி] நிற்பார்களா என்று. கூட்டத்தை சற்றே ஆரம்பிப்பதற்காக. கூறுவார்களா, "சகோதரன் பிரன்ஹாமே, தேவனுடைய உதவியால், இன்றிரவு என்னை நானே பிரதிஷ்டை செய்கிறேன், தேவன் அவரோடுகூட அந்த மறைவான ஜீவியத்தை எனக்கு சரியாக இப்பொழுதே தர வேண்டுமென்று நான் ஜெபிக்க போகிறேன், ஆகவே உலக காரியங்களில் கவனம் செலுத்துவதை, மற்ற ஜனங்களையும் மற்றும் சபையில் வருகிறதான சிறிய பழைய மாறுபாடுகளை கவனிப்பதையும் நான் விட்டுவிட போகிறேன். நான் அவருக்காக உண்மையாக ஜீவிக்கும் நிலைக்கு அவரிடம் நான் வர விரும்பு கிறேன். " ஒரு சிறிய ஜெபத்திற்காக நீங்கள் இங்கே வந்து பீடத்தை சுற்றி நிற்பீர்களா? நீங்கள் அதை செய்வீர்களா என்று நான் ஆவல் கொள்கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, என் சகோதரனே. அது பரவாயில்லை. அது நன்றானது. சரியாக இங்கே வந்து, கூறுங்கள், "இன்றிரவு நான் ஆயத்தமாக இருக்கிறேன். நான் தேவனிடத்தில் ஜெபிக்க போகிறேன் எதற்கென்றால் - எதற்கென்றால் -அந்த உள் திரைக்குள் (Inner Veil) என்னை கொண்டு செல்லும் படிக்கு அவர் என்னுடைய ஜீவியத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டுமென. அவரிடம் கேட்பதற்கு சரியாக நான் இப்பொழுதே வருகிறேன்." அவர் அதை செய்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது அதிசயமானது. ஓ, ஒரு பிரதிஷ்டைப் பண்ணப்பட்ட ஜீவியத்திற்காக இப்பொழுது வருகிறார்கள்... 60. நண்பனே, குருடரின் கண்களை திறக்கவும், முடமானவர்களை நடக்கவைக்கவும், ஊமையரை பேசவைக்கவும் அவர் என்னுடைய ஜெபத்தை கேட்பாரானால்... மரித்தோரிலிருந்து மூன்று அல்லது நான்கு மரித்த நபர்களை அவர் எழுப்புவதை நான் கண்டிருக்கிறேன். நான் மூடபக்தி வைராக்கியம் கொண்டவனல்ல. பிற்காலத்தில் நீங்கள் அதை அறிவீர்கள். நான் உங்களுக்கு சத்தியத்தை மட்டுமே கூறுகிறேன். ஏனெனில் தேவனுக்கு முன்பாக நான் பொறுப்பாளியாயிருக்கிறேன். இன்றிரவு இந்த பிரதிஷ்டை செய்யப்பட்ட ஜீவியத்திற்காகவும் நிச்சயமாக அவர் கேட்பார். இந்த ஜனங்களின் சேனையை பாருங்கள். சகோதரனே, நான் உன்னை சந்திக்க விரும்புகிறேன்; சகோதரியே, நான் உன்னை சந்திக்க விரும்புகிறேன். இதை விட ஒரு மேலான தேசத்தில். ஒரு ஊழியக்காரனாக நான் இங்கே நின்றிருப்பது எவ்வளவு உறு தியோ, அவ்வளவு உறுதியாக என் சகோதரனும் சகோதரியுமாகிய நீங்கள் அங்கே நின்று தேவனோடு நெருங்கி நடை போட விரும்புகிறீர்கள், எதினால் அதை அவர் உங்களுக்கு தராமல் போவார்? அவர் அதை வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். உங்களால் கூடும் என்று அவர் கூறியிருக்கிறார். இப்போழுது நாம் தான் முடிவு செய்ய வேண்டும், இல்லையா? நாம்தான் விசுவாசிக்க வேண்டும். இப்பொழுது அவர் அதை செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு புதிய ஜீவியத்தை அவர் ஏற்படுத்துவார் என்று நான் விசுவாசிக்கிறேன். 61. என்னே, சற்றே பாருங்கள், ஜனக்கூட்டத்தில் பாதி இங்கே பீடத்தண்டை நிற்கிறார்கள், அவர்களில் மீதியான மற்ற பலரும் இன்னமுமாக பிரதிஷ்டை ஜெபத்திற்காக வந்துக் கொண்டிருக் கிறார்கள், நம்முடைய ஜீவியங்களை கொடுத்து, நம்மை சமர்பிக் கிறோம். "கர்த்தாவே, ஒவ்வொரு நாளிலும் ஜெபிக்க வேண்டியி ருப்பதால் நான் சோர்வாயிருக்கிறேன். அவையெல்லாவற்றையும் நான் தீர்த்துக்கொள்ள விரும்புகிறேன். இப்பொழுதே அந்த உட்பிரகாரத்திற்குள் நான் வர விரும்புகிறேன். இன்றிரவு அந்த திரைக்கு பின்னாக நான் வருகிறேன். நான் உம்மோடு உள்ளே வருகிறேன். மற்ற யாரேனும் என்ன கூறுகிறார்கள் என்பதை பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை, ஒன்றுமேயில்லை. கர்த்தாவே நான் உள்ளே வருகிறேன். இங்கே வந்து உம்முடைய பிரசன்னத்தில் என்றென்றுமாய் நிலைத்திருப்பேன். உலகத்தின் ஆசைகள் எனக்கு வேண்டாம். உமக்குள் ஒரு பிரிதிஷ்டைப் பண்ணப்பட்ட ஜீவியத்தையே நான் விரும்புகிறேன். சரியாக இப்பொழுது இந்த எழுப்புதலில் என் ஜீவியம் ஆரம்பிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இன்னும் கொஞ்ச நாளில் எழுப்புதலானது ஆரம்பிக்கும்போது, முடமானவர்கள் நடப்பார்கள் மற்றும் குருடர் பார்ப்பார்கள், தேசம் முழுவதும் சாட்சிகளின் ஒலி கேட்கும், அதில் நானும் பங்கு வகிக்க விரும்புகிறேன். மேலும் இப்பொழுது என்னுடைய ஜீவியத்தை நான் அர்பணிக்கிறேன். ஒருவேளை நீர் என்னை இந்த எழுப்புதலின் போது உபயோகிக்கலாம்." உங்களை எடுத்துக் கொள்ளுங்கள். பிரசங்கியாரோ அல்லது மற்ற யாரோ உபயோகிக்கபடுவது போன்றே நீங்களும் உபயோகிக்கப் படுவீர்கள். நிச்சயமாக உங்களால் கூடும். 62. இன்றிரவு இங்கே யாரேனும் ஒரு பாவியான நண்பன் இருக்கிறானா, அவன் வந்து கூறுவானா, "தேவனே, இப்பொழுது நானும் கூட என்னுடைய ஜீவியத்தை அளிக்க வருகிறேன்" என்று. இங்கிருக்கும் ஒவ்வொரு பாவியையும் நான் அழைக்க விரும்புகிறேன். இங்கே பாவி யாரேனும் இருக்கிறீர்களா உங்களுடைய கரத்தை உயர்த்தி, கூறுவீர்களா, "சகோதரனே, எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். வருவதற்கு எனக்கு தைரியமில்லை, ஆனால் நீங்கள் எனக்காக ஜெபிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்." பீடத்தை சுற்றி பலர் இங்கே நின்று தங்கள் கரங்களை உயர்த்தியிருக்கிறார்கள்: கிறிஸ்துவுக்கு தங்களுடைய ஜீவியங்களை கொடுக்க வந்த பாவிகள். இன்னமும் அந்த ஜனக்கூட்டதில் பாவி யாரேனும் இருக்கிறீர்களா? ஜனத்தில் மூன்றில் இரண்டு பங்கு பீடத்தை சுற்றி இருக்கிறார்கள். நீயும் வருவாயா? நாம் பாடலாம் "நான் இருக்கிற வண்ணமாகவே," உங்களுக்கு விருப்பமானால், என் சகோதரனே. எல்லாம் சரி, யாரேனும். நான் இருக்கிற வண்ணமாகவே, எந்தவொரு வேண்டுகோளும் இல்லாமல், ஆனால் உம்முடைய இரத்தம் எனக்காக சிந்தப்பட்டதால், நீர் என்னை உம்மிடம் வா என்று அழைத்தால், ஒ தேவ ஆட்டுக்குட்டியே, நான் வருகிறேன். நான் வருகிறேன். 63. இப்பொழுது, என் அன்பார்ந்த நண்பனே, இன்றிரவு இங்கே தேவனுடைய பீடத்தண்டை நீ நிற்கிறாய். ஒரு முறை சில குஷ்டரோகிகள் சமாரியாவின் ஒலிமுக வாசலில் கிடந்தார்கள். சீரியர்களால் அவர்கள் முற்றுகையிடப்பட்டிருந்தனர். மேலும் உள்ளே புசிப்பதற்கென்று ஒன்றுமே இல்லை. அவர்கள் மற்றவர்களின் குழந்தையை புசித்தார்கள் ஏனெனில் அவர்கள் பாவம் செய்து தேவனை விட்டு பின்வாங்கி யிருந்தார்கள். சீரியரின் ராணுவம் அவர்களை அவ்விடத்திலிருந்து வெளியேறசெய்திருந்தது. அவர்களால் அந்த வழியில் செல்ல முடியவில்லை. அவர்கள் சென்றால், அவர்கள் மரிப்பார்கள். மேலும் அவர்களால் இங்கேயும் தரித்திருக்க முடியவில்லை, 'ஏனெனில் அவர்கள் மரிக்கும் தருவாயிலிருந்தனர். அவர்களுக்கு ஒரே ஒரு நம்பிக்கைதான் இருந்தது; அது சீரியரின் கூடாரத்திற்கு செல்வதே. அவர்கள் அவர்களை இரட்சித்தால், அவர்களால் ஜீவிக்க முடியும். அவர்கள் அதை செய்யவில் லையென்றால், எப்படியாயினும் அவர்கள் மரிக்க போகிறார்கள். ஆகவே அவர்கள் திரும்பி சீரியரின் கூடாரத்தை, எதிரியை நோக்கி செல்ல ஆரம்பித்தனர். தேவன் அவர்களுக்கு பலனளித்தார், பாலைவனத்தில் மகா இரைச்சலை கேட்கும்படி செய்து, எல்லா சீரியர்களையும் துரத்திவிட்டார். அவர்கள் தங்களை மட்டும் இரட்சித்துக்கொள்ளவில்லை, அவர்கள் முழு நகரத்தையும் இரட்சித்தார்கள். இப்பொழுது, இன்றிரவு இங்கே அமர்ந்திருக்கும் உங்களில் பலர் பெந்தெகொஸ்தே ஜனங்களாயிருக்கிறீர்கள், அந்நிய பாஷையில் பேசும் மகத்தான அனுபவங்கள் பெற்றவர்களாய், ஞானஸ் நானத்தோடு மேலும் மற்றவைகளோடு இருக்கிறீர்கள், ஆனால் இன்னும் ஒருபோதும் அந்த பிரதிஷ்டைப்பண்ணப்பட்ட ஜீவியத்திற்குள் வராமலிருக்கிறீர்கள். இன்னும் உங்களுக்கு அங்கே இடமிருக்கிறது. பாருங்கள், நீங்கள் மன்னவை புசிக்கிறீர்கள். நாளை இரவு அதை குறித்து நான் இன்னும் விளக்கமாக கூறுகிறேன் 'ஏனெனில் அது எனக்கு சுலபமாயிருக்கிறது, ஏனெனில் நான் நிற்கும் நிலையை நான் உணருகிறேன். 64. ஆனால் இப்பொழுது... பாருங்கள், நீங்கள் ஒரு இடத்திற்கு வந்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது, நீங்கள் மறைந்து இடமிருக்கிறது கொள்ள கிறிஸ்துவிற்குள் ஒரு மறைவான என்பதை நீங்கள் உணருகிறீர்கள், அதாவது உங்கள் சத்துருக்கள் ஒவ்வொருவரையும், நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்கள். அதை குறித்து ஏதோவொன்று இருக்கிறது, அதாவது ஜனங்கள் உங்களை நேசிக்க வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள்; நீங்கள் இனிமையானவராயிருக்க விரும்புகிறீர்கள். ஜனங்கள் இனிமையாயிருக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால், நீங்களும் இனிமையாக இருக்க வேண்டும். உங்களால் முடியாது... நீங்கள் அதை பாவனை செய்தால், அது வேலை செய்யாது. அது வேலை செய்யாது. அவர்கள் அதை அறிந்து கொள்வர். நீங்கள் எதையுமே பாவனை செய்ய முடியாது. பாவனை விசுவாசியாயிருக்காதீர்கள் இன்றைக்கு நம் தேசத்தை பற்றிய காரியமும் அதுதான் மிக அதிகமான பாவனை விசுவாசிகளும், வெறும் மார்க்கம் சார்ந்த கிரியைகளுமே இருக்கிறது. மிக அதிகமான ஜனங்கள் விசுவாசிப் பதை பாவனை செய்து, கிறிஸ்தவத்தை நடிக்க முயற்சிக்கின்றனர், கிறிஸ்தவர்களை போல் நடிக்க ஏதோவொன்றை செய்ய முயற்சிக்கின்றனர். அவையெல்லாம் வேலை செய்யாது, நண்பனே. தேவன் அதை அறிவார்; பிசாசும் அதை அறிவான் ஜனங்களும் அதை அறிவர். நீங்கள் கலப்படமில்லாதவர்களாயிருக்க வேண்டும். நீங்கள் அசலானவர்களாக (original) வேண்டும். தேவன் அதை கனம் பண்ணுவார். ஒருவேளை நீங்கள் காளானை போன்று வளராமலிருக்கலாம். ஆனால் நான் ஒரு காளானாயிருப்பதற்கு பதிலாக எந்நேரமும் கர்வாலியாகவே இருக்க விரும்புகிறேன். எளிதில் வளரும். மெதுவாக வளரும். உங்களுடைய வேர்கள் ஆழமாக மற்றும் சரியாக வேரூன்றியதாய் இருக்க பாருங்கள், பின்பு நீங்கள் வரலாம். 65. இப்பொழுது, இன்றிரவு உங்களுடைய சகோதரனாகவும் மேலும் கர்த்தராகிய இயேசுவிற்குள் உங்களுடைய ஊழியக்காரனாய், உங்களிடம் ஒன்றை நான் கேட்கட்டும். இதை உங்களுக்காக செய்யுங்கள் மேலும் அதை கர்த்தராகிய இயேசுவினிடத்தில் வந்து கூறுங்கள், "தேவனே, உண்மையாக கூறுங்கள். என்னுடைய பிழை என்னவென்பதை நீர் அறிவீர். ஒவ்வொரு நாளும் இந்த சிறிய காரியங்களோடு நான் போராட வேண்டியிருக்கிறது என்பதை நீர் அறிவீர், அதை செய்வது எனக்கு கடினமாயிருக்கிறது. ஆதலால் தான் நான் இங்கே நின்றிருக்கிறேன்". ஒருபோதும் இதற்கு முன் கிறிஸ்துவிடம் வராத பாவிகளே, அவரிடம் வந்து, கூறுங்கள், "கர்த்தாவே, இதோ நான் இருக்கிறேன். நான் ஆரோனின் பழைய கோல். என்னில் நன்மை ஏதுமில்லை; ஆனால் கர்த்தாவே இன்றிரவு சரியாக நான் உம்முடைய பாதத்தில் கிடக்க போகிறேன்.' அது எப்படியாய் பூப்பூக்க ஆரம்பிக்கும் என்பதை கவனித்து பாருங்கள். எப்படியாய் கனிகள் வரும் என்பதை கவனியுங்கள். 66. இப்பொழுது, உங்களுடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து அதை உண்மையாகவே கூறுங்கள், தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் இன்றிரவு தன்னுடைய இராஜ்ஜியத்திற்குள் எடுத்து, உங்களுடைய ஜீவியங்களை பிரதிஷ்டை பண்ணுவார். சரியாக இந்நேரமே அது நடக்கலாம். அது நடக்கும் என்று நான் விசுவாசி க்கிறேன். நான் ஒரு நபரல்ல... நான் உணர்ச்சிவசப்படுகிறவனல்ல; நான் பாவனை செய்பவனல்ல. அதிக திடமான, புத்தியுள்ள, பரிசுத்த ஆவியின் மார்கத்தை விசுவாசிப்பவன் நான். அது சரி. இது சற்றே கலப்படமில்லாமலும் பரிசுத்தமாகவும் இருக்கிறது. சகோதரனே, அது சரி. அதை போதிக்கதான் நான் இங்கே இருக்கிறேன். அதை அறிமுகம் செய்யதான் நான் இங்கே இருக்கிறேன். 67. அவ்விதமாக நீங்கள் இன்றிரவு கர்த்தராகிய இயேசுவிடத்தில் வரவேண்டுமென நான் விரும்புகிறேன், கூறுங்கள், "கர்த்தாவே, நான் உள்ளே வர விரும்புகிறேன். இப்பொழுது, இந்த கூடாரத்தை நீர் எனக்கு தந்தீர், அதை நான் நீதிமானாக்கப்படுதலுக்கு கொண்டுவந்தேன்; ஒரு சபையை நான் சேர்ந்தேன். நல்லது, இன்னமுமாக நான் பிரதிஷ்டை பண்ணப்படவில்லை. கர்த்தாவே, நான் வந்து ஒரு சபையின் ஜீவியத்தை ஜீவிக்க முயற்சித்தேன், ஆனால் எனக்கு வெற்றிகளும் தோல்விகளும் இருந்தது. இப்பொழுது அந்த பரிசுத்தமாக்கப்பட்ட இடத்திற்குள் நான் செல்ல விரும்புகிறேன். உள்ளே வாரும், கர்த்தாவே. இன்றிரவு இந்த உலகத்தை விட்டு என்னை வெளியே எடும். என்னை சுற்றி திரைகளால் மூடும், இங்கே கர்த்தருடைய மகிமை பிரகாசிக்கும் உம்முடைய ஷெக்கினா மகிமையில் நான் உம்மோடு மறைந்துக் கொள்ளட்டும்". கவனியுங்கள், நண்பர்களே, உங்களில் எத்தனை பேர் கர்த்தருடைய தூதனானவருடைய படத்தை எப்பொழுதாவது பார்த்திருக்கிறீர்கள், இங்கே இந்த கூட்டங்களுக்கு அதை நாம் கொண்டு வந்தோமா? முடிந்தால் இன்னும் சிறிது நாட்களில் அதை நான் இங்கே கொண்டு வருகிறேன். தேவன் என் நீதிபதியாயிருக்கிறார், நீங்கள் அறிவீர்கள் நான் நான்.... நான் உங்களுக்கு சத்தியத்தை கூறுகிறேன். அந்த அதே கர்த்தராகிய இயேசு... சுகமளித்தலுக்கான அபிஷேகத்தை அந்த அபிஷேகத்தை தள்ளி வைக்க இப்பொழுது போராடுவது எனக்கு மிகவும் கடின மாயிருக்கிறது, 'ஏனெனில் மிக மிக மோசமான நிலையிலிருக்கும் ஒரு வியாதிப்பட்ட மனிதன் சரியாக பின்னாக நின்றுக் கொண்டிருக்கிறான். இப்பொழுது அதை நான் காண்கிறேன். அந்த படத்தில் நீங்கள் பார்க்கும் அந்த தேவனுடைய வெளிச்சம். அதற்கு வாஷிங்டன், டிசி (DC) - யிலுள்ள அமெரிக்க புகைப்பட சங்கம் கூட பதிப்புரிமை தந்தது. அது சரியாக இப்பொழுது இங்கே இருக்கிறது. நான் இதுவரை கூறியதிலே அதுதான் சத்தியம். அது உண்மை. அது சரியாக இங்கே இருக்கிறது. நான் - நான் அதை அறிவேன். நான் உங்களிடம் உண்மையைத்தான் கூறுகிறேனா என்று இந்த வாரத்தின் பிற்பகுதியில் கண்டறிவீர்கள். 68. இப்பொழுது, தாழ்மையாக நம்முடைய தலைகளை தாழ்த்தலாம். மேலும் நீங்கள் ஒவ்வொருவரும் தாழ்மையாக, நிதான மான மனநிலையோடு உங்களை நீங்களே கர்த்தராகிய இயேசுவிடம் கொடுங்கள். "இன்றிரவு, கர்த்தாவே, நான் வாக்கு கொடுக்கி றேன். நான் வருகிறேன், இந்த இரவு முதல் நான் உமக்காக சேவை செய்யப் போகிறேன். என்னுடைய ஜீவியத்தை நான் மறைத்துக் கொள்ள போகிறேன். கர்த்தாவே, என்னை உள்ளே அழைத்து சென்று, ஷெக்கினா மகிமையண்டயிலே என்னை கிடத்தும்." என்று கூறுங்கள். 69. இப்பொழுது, பரலோக பிதாவே, உம்முடைய ஊழியக்காரனாக நான் இவர்களை கொண்டு வருகிறேன், உம்முடைய அன்பான பிள்ளைகள், பீடத்தை சுற்றி நிற்கிறார்கள்... பசியில்லாமல் இருந்திருந்தால் அவர்களால் எப்படி வந்திருக்க முடியும்? உங்களுக்கு பசியிருந்தால், அந்த பசியை ஏதோவொன்று உண்டு பண்ணுகிறது, ஆழம் ஆழத்தை நோக்கி கூப்பிடுகிறது. அவர்களில் இருக்கும் ஏதோவொன்று "ஒரு வித்தியாசமான ஜீவியமிருக்கிறது. தேவனில் இன்னும் அதிகமிருக்கிறதென்று" என்று பேசுகிறது. இங்கே அது பசியோடிருப்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக அதற்கு பதிலளிக்க அங்கே ஒரு ஆழமிருக்கிறது. அவர்கள் பெற்றுக் கொள்ள தேவனில் இன்னும் அதிகமிருக்கிறது. பிதாவே, அவர்களில் ஒவ்வொருவரையும், உம்முடைய அன்பான அக்கறையால் இன்றிரவு இப்பொழுதே அவர்களை நீர் அந்த உட்பிரகாரங்களுக்கு கூட்டிச் செல்ல மாட்டீரா. அவர்கள் தங்கள் தலைகளை தாழ்த்தியிருக்கின்றனர். அவர்கள் இங்கே நின்று தங்களையே பிரதிஷ்டைப்பண்ணிக் கொண்டிருகின்றனர். அவர்கள் உம்மை நேசிக்கின்றனர், கர்த்தராகிய இயேசுவே, அவர்கள் ஜெயம் கொள்ள விரும்பும் காரியங்கள் அவர்களிடமிருக்கிறது. அதை இப்பொழுதே அருளும், கர்த்தாவே. 70. அவர்களில் ஒவ்வொருவருக்கும், கரங்களை விரித்தவராய் தரிசனம் தாரும், இப்பொழுதே அவர்களை தேவனுடைய பிரகாரங்களுக்கு அழைத்துச் செல்லும். இந்த இரவு முதல், அவர்கள் பிரதிஷ்டைப் பண்ணப்பட்டவர்களாயிருக்கட்டும். மகிமையிலிருக்கும் பரிசுத்த ஆவி, இப்பொழுது அவர்களில் ஒவ்வொருவரையும் நிழலிட்டு, அவர்களுடைய இருதயத்திற்குள் அந்த ஆழமான, நிலையான, இனிமையான மனநிலையை தாரும்; ஒ, அதாவது உங்களால் தேவனோடு ஜீவிக்க முடியும்; உம்மை கேள்வி கேட்காமல் உம்மை நேசித்து சற்றே பிரதிஷ்டைப் பண்ணப்பட்டு, உம்முடைய ஆவியால் நிரம்பி உமக்காக சென்று ஜீவிக்கும் மன நிலையை, சுபாவத்தில் ஒரு மாற்றத்தை தாரும். தேவனே, அவர்கள் ஜெபிக்கிற வேளையிலே இன்றிரவு இங்கிருக்கும் ஒவ்வொரு இருதயத்திலும் அது நிலைத்திருக்கட்டும். நாங்கள் உம்மை நேசிக்கிறோம், இயேசுவே. நீர் எங்களை அழைத்தீர். நீர் கூறியிருக்கிறீர், "வா, விரும்புகிற எதைவேண்டுமானலும் என் பிதாவிடம் கேள். என் நாமத்தால் கேள்; அதை நான் உனக்கு தருவேன். அதை நான் உனக்கு தருவேன்," என்று நீர் கூறியிருக்கிறீர். மேலும், கர்த்தாவே, உம்முடைய வார்த்தையை நீர் காத்துக்கொள்ள வேண்டியவராயிருக்கிறீர்; நீர் தேவன். நாங்கள் வந்திருக்கிறோம், மேலும் நாங்கள் கேட்கிறோம், நாங்கள் அதை பெற்றுக்கொள்வோம், ஏனெனில் அதை நீர் எங்களுக்கு தருவதாக நீர் கூறியிருக்கிறீர். இப்பொழுது நாங்கள் அதை விசுவாசித்து அதை விசுவாச கரங்களோடும், கண்ணீர் வடிந்த கண்களோடும், உயர்த்திய கரங்களோடும், பிரதிஷ்டைப் பண்ணப்பட்ட இருதயங்களோடும் ஏற்றுக் கொள்கிறோம், புதிய ஜீவியத்தை, பரிசுத்த ஆவியின் வல்லமையை, மறைந்து கொள்வதை, அந்த ஷெக்கினா மகிமையை, அன்பின் ஞானஸ்நானத்தை மற்றும் வல்லமையை மற்றும் ஆராதனையை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதை ஒப் படைக்கிறோம், கர்த்தாவே, தேவனுடைய குமாரன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் அதை ஏற்றுக்கொள்கிறோம்.